சனி, 7 செப்டம்பர், 2019

171. (743) தொழ வேண்டும்;!...






    
      




தொழ வேண்டும்;!...

பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
குட்டிக் கொலுசும் கட்டுதடி என்னையே!
கெட்ட திருஷ்டியை வெட்டக் கறுப்பாய்
பொட்டிட்ட குட்டிச் சுட்டி ராணியே!
எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
'' ஆ '' காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
'' பா '' கேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
குழலினும் இனியது குழந்தை மொழி
மழலையின் மயக்கமது இன்ப வழி
தொழ வேண்டும!; மழலையின் அரங்கேற்றம்!
தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!

26-12-2015.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...