புதன், 18 செப்டம்பர், 2019

185 (பெண்மை - 35 ) பெண்கள் தினம் ஏன்!.









பெண்கள் தினம் ஏன்!

பெருமையுடன் மனிதம் வாழ்ந்தால்
பெண்கள் தினமேன்று உலவுமா!
நேசத்திற்கு உரியவர்கள் அடிமைகளல்ல
தூசிக்கு அவர்கள் சமானமல்ல

அதிகாரப் பலிப்பூக்களல்ல மானிடர்கள்
ஆணவப் பலிப்பூக்களல்ல பெண்கள்
ஆர அமர யோசியுங்கள்
ஆங்காரமி;ன்றிப் பிரச்சனைகளைத் தீருங்கள்.

பெண்மையை ஆணும்  ஆணைப்
பெண்ணும் அடிமை கொள்ளல்
பண்பற்ற மடமை நிழல்
மண்ணில் உலகவாழ்வு போட்டியல்ல

விண்ணையெட்டும் வேதனைப் பெருமூச்சும்
கண்ணீர் விழுதுகளும் என்றும்
நுண்ணம்புச் சரமாக வேண்டாம்.
நுட்பமான மென் சுவாசமாகட்டும்.

அகந்தை சுவாசம் அழித்து
அன்புக் குளிர்மை நிறைத்து
தன் குடும்பக் கவசமென
தளபதியாவாள். தண்புனலாக்குவாள் குடும்பத்தை

கனல்கவி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்   7-3-2020










6 கருத்துகள்:

  1. Sujatha Anton மகளிர்தின வாழ்த்துக்கள். நன்றிகள்`` கவிதாயினி வேதா``
    7-8-2020

    பதிலளிநீக்கு
  2. Ashok MA Mphil :- வணங்குகிறேன்
    தாயே..!
    இத்திருநாளில்..
    7-3-2020
    Vetha Langathilakam :- இறை ஆசி நிறையட்டும் அசோக்.

    பதிலளிநீக்கு
  3. Rathy Mohan பெண்கள் தினம் ஏன்?? நல்ல கேள்வியோடு
    7-3-2020

    Vetha Langathilakam :- ஆம் ரதி....2003 poem I changed......

    பதிலளிநீக்கு
  4. Gandhimathi Selvarathinam அருமை
    8-3.2020
    Aathan Joe:- photo wish
    8-3-2020

    பதிலளிநீக்கு
  5. Kannadasan Subbiah :- இனிய நல்வாழ்த்துகள் சகோதரி
    8-3-2020
    N8-3-2020aakai aasaithamby :- photo comment...

    பதிலளிநீக்கு
  6. NV Easwary:- Photo wish...
    Vetha:- Thank you

    Manjula Kulendranathan:-
    வாழ்த்துக்கள் சகோதரி
    8-3-2020

    Vetha:- அன்புடன் மகிழ்ச்சி மஞ்சு

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...