வெள்ளி, 13 செப்டம்பர், 2019

184. (755 ) களவும் கற்பும்.









களவும்  கற்பும்.

அகத்திணை வாழ்வின் இரு பகுதியே
அகத்தினுள் இரகசியமானது களவும் கற்புமே
அகப்பொருள் இலக்கணத்தில் பேச்சதிகம் களவே 
அடுத்தவர் அறியாது நிகழும் ஒழுக்கமிதே.

பெற்றவருக்கு களவு நெறி குற்றமே 
சுற்றமெனும் சமூகம் கருதாது குற்றமென.
உற்ற காதல் கைகூடி ஊரறிய
வெற்றியடையும் திருமண உறவு கற்பு.

கற்பியலாம் திருமணம்  புக இருவழியாம்
அற்புத  மரபுநெறி களவுநெறியாமிது தொல்காப்பியம்.
கற்பும் களவுமுலகில் கைக்கொள்ளும் ஒழுக்கம்.
பற்றுகிறார்  இதைக் கைக்கோள் என்று.

மறைமுகமாய்க் கண்டும் கூடியும் இன்பிக்கும்
குறையுடைய வாழ்வு களவு எனலாம்.
மறையோதிச் சேர்ந்த திருமணம் கற்பாகி
இறைநிலை ஆதரவு பெறுவது கண்கூடு.


6-7-2018






இலங்கை ஞானம் சஞ்சிகையில் (october- 2019)

எனது கவிதை. நன்றி ஞானம் சஞ்சிகைக்கு.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...