பண்பாடு பழகாமல்
பண்பாடு பழகாமல் பெரும்
கண்ணியம் தொலைத்து அரும்
பெண்ணியமும் மதிக்காது உள்ளம்
புண்ணாக்கும் வாழ்வு ஏன்!
எண்ணத்தை முதலில் பண்படுத்துங்கள்!
வண்ணமுடை மனிதம் செழிக்கும்.
19-6.2017
கவிமுகம்
ஓ! மனிதா! கவிதை காலத்தின் கண்ணாடி கருத்துடை குறள் காலத்து விருப்புடை வாழ்வு வராதா! நெருக்கடி வாழ்வில் நொறுங்கும் மனிதா! மகத்துவப் பெறுமதியான மனிதம் தொலைக்கிறாயே! ஓ! மனிதா! சுயநலத்தைத் தூக்கியெறி! புனித திருக்குறள்கால வாழ்வைக் கையிலெடு!.
2nd comments:-
பதிலளிநீக்குSivasiva Denmark
திருவள்ளுவர் உண்ணும்போது அவர் மனைவி ஒரு ஊசியுடன் பதிபக்தியுடன் அருகில் நிற்பாராம். அவர் உண்ணும்போது ஒரு பருக்கை தவறி விழுந்தால் ஊசியால் குற்றி எடுப்பதற்காக. இறுதிவரை அன்னம் தவறவுமில்லை. வாசுகி ஊசியால் குற்றி எடுக்கவுமில்லை. இது ஒரு தகவலே தவிர விமர்சனத்திற்குரியதில்லை. அக்காலத்து மனிதத்துவத்தின் மாண்புமிகு வாழ்வு மீண்டும் வருமா !!!
24-4-2010
Velaniyoor Ponnanna Ponnaiah
வருமா என்ற கேள்விக்கு பதில். வேதா குடும்பதில்
ஐரோப்பா தேசத்தில்செயல்படுகி்ன்றதே உண்மை
24-4-2010
Vetha Langathilakam
கவிமுகம் தலைப்புக் கவிதை இது.
24-4-2010