தடுப்புகள் தடையில்லை.
ஊற்று நீரை அடைப்பதுவும்
காற்றைப் புட்டியில் அடைப்பதுவும்
கற்பனை ஊற்றைத் துடைப்பதுவும்
விற்பன்னராலும் இயலாதது.
பூமி வெடித்துப் பிளப்புதுவும்
பூம்பம் சடுதியாய் உருவாவதும்
பூஞ்சணமெனும் பற்றுநோய்பீடிப்பதுவும்
பூரணமாய் யாரும் அறிவதில்லை
தானே இயற்கையாய்த் தோன்றும்
தானே இயற்கையாய் அழியும்.
வீணே போடும் தடைகள் காலத்தில்
காணாமற் போகும் காற்றின் ஓட்டமாய்.
சாயாத நம்பிக்கை உயிரின் தெம்பாய்
ஓயாத முயற்சி வாழ்வின் பயிற்சியாய்
தீயாத இலட்சியத்தை வாழ்விலடைந்தால்
தேயாத இன்பம் வாழ்வில் தொடரும்.
in tamilauthors.com



அருமை
பதிலளிநீக்குRashid Ahmed :- அருமை! அருமை!!
பதிலளிநீக்கு-கருப்பு நிலா.
17-11-2019
Mikka mkilchchy...urave
நீக்குMikka makilchchy. urave
நீக்கு