இதுவும் ஒரு தொடர்கதையே
துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை
அந்தநிலை வாழ்வில் நாமாகத் தொடுமெல்லை
சொந்த மனதுச் சோதனையால் விரக்தி நிறையும்
சிறுமனம் திரிந்து, எரிந்து புகையும்
பொறுமை குணம் முற்றாக அணைந்தால்
நாம் தூங்க நல் ஞானம் தூங்குவதால்
ஆம் என்று சோகம் தானாக நுழைதலே.
ஆழ்ந்து பார்த்தால் இதுவுமொரு தொடர் கதையே
ஆன்மதவம், தர்மநெறி நீறுபூப்பதால்
ஆன்மாவின் ஆழ்அமைதி அவிந்து போதலே.
22-2-2004


Subi Narendran :- துன்பநிலை நாமாக வாழ்க்கையில் தேடிக்கொள்வதென்பதை கவிதை வரிகள் அழகாக சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு22-1-2020
Vetha Langathilakam :- ப்ரியங்கள்
மகிழ்ச்சி சகோதரி