ஞாயிறு, 30 நவம்பர், 2025

542 (1062) ஓம் நமச்சிவாய!!!

 

 




ஓம் நமசிவாய!!!

சிவாயநம ஓம்!!!!!

நாட்டின் நிலை தாங்கொணாத துன்பநிலை

நாட்டமுடன் முடிந்தவரை தொலைபேசியில்

கேட்டறிந்து மனதைத் தேற்றும் முயற்சியில்

உலகசமாதானம்   பெருக்குக என்று வணங்கியது போய்

இலங்கையே அழியும் நிலையா!  சோதனையா!

இறைவா! அருள் புரியுங்கள்...காப்பாற்றுங்கள்!!!

குறைவின்றிக் கை கொடுங்கள்!!!!

ஓம் நமச்சிவாய!!!!!!!!

29-11-2025



                 




   


வியாழன், 27 நவம்பர், 2025

541 (1061) 8.(248) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

 

        8.(248)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

       



(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


8.(248)  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


நன்னிலைக்கட்    டன்னை  நிறுப்பானுந்  தன்னை

நிலைகலக்கிக்   கீழிடு   வானு   நிலையினு

மேன்மே  லுயர்த்து  நிறுப்பானுந் தன்னை

தலையாகச் செய்வானுந் தான்.


தன்னை நல் நிலைக்கண் - தன்னை நல்ல நிலையிலேயே   நிறுப்பானும்- நிறுத்த வல்லவனும்

தன்னை நிலை கலக்கி - தன்நிலையிலும் தன்னைக் கலங்கச் செய்து.   கீழ் இடுவானும் - கீழ்ப்பட்ட நிலையில்  வைப்பவனும்

மேல் மேல் உயர்த்து நிறுப்பானும் - மேலும் மேலும் உயர்ந்த நிலைமையில் உயரச் செய்து நிறுத்த வல்லவனும். தலையாகச் செய்வானும் - யாவர்க்கும் உயர்ந்து  தலைவனாகச் செய்யும் ஆற்றலுடையவனும் - தான்- தானேயன்றிப் பிறரொருவனல்ல


          



எனது வரிகள்:-


தன்னை நல்ல நிலையில் வைப்பவனும்

தன் நிலை கலங்கிக் கீழிறங்குபவனும்

இன்னும் தன்னிலையிலும் மேலே உயர்பவனும்

தன்னைத் தலைவனாக்கும் திறனுடையவனாதலும்

தானே தான் வேறொருவரல்லர்.

---------------------------------    


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க். – 27-11-2025



                



540 (1060) அஞ்சலி..... ஆனந்தமகேசனின் அம்மா.

 

 வேதாவின் வலை  1 ல் -  22 அஞ்சலிப்பாக்கள்.

வேதாவின் வலை 2ல் - 15  அஞ்சலிப் பாக்கள்

இனி இங்கு  முதலாவது...என தொடங்குகிறேன்.     



1.     ஆனந்தமகேசனின் அம்மா.



அம்மாவின் நூறாவது பிறந்ததின நினைவுநாள் 2-9-1925


தன்னுடலிற்குள் இன்னொரு உயிரை வைத்து

இன்னுயிர் கொடுத்து வலியோடு கருவேந்துபவள்

அன்புத்தாய்! - எங்கள் அம்மா காரைதீவு

ஆறுமுகம் கனகம்மா கந்தவனம் கனகம்மாவாகி

எம்மை ஈன்றவரின் நூறாவது பிறந்ததின

நினைவு நாள்.(2025) 


இன்று மட்டுமல்ல  காலம் முழுதும் உங்கள் நினைவுகளை-

அணைப்புகளை - வார்த்தைகளை மறக்காது வாழ்கிறோம்.

உங்கள் ஆத்மா அமைதியடையும் போது

உங்களைக் கருணையோடு நாம் நினைக்கிறோம்


குளிர்நீராக உங்கள் நினைவு பாய்ந்து

எங்கள் இதயப்பைகளை எப்போதும் நிறைக்கிறது.

மானுடத்தின் தாகம் தணிக்கும் உயிர்நதி!

துன்பமுறும் மானுட இதயத்தை அமைதிப்படுத்தும்


அற்புதக்கொடை அம்மாவை வணங்குகிறோம்! சாந்தி!







          


வெள்ளி, 21 நவம்பர், 2025

539 (1059) thamil - மூடிவைக்கவில்லை என் எழுதுகோலை...

 

         



       


        மூடிவைக்கவில்லை என் எழுதுகோலை...

00

நனைந்த நேரம் நினைந்து

வனைந்த அழகுக் காட்சியாக

நினைந்து நினைந்து குளிர்தலே

இன் தமிழ் திமிர் மையலே!

00

என்னிதயவெளி நாயகா நீயோ!

மின்னலாய் நுழையும் மின்சாரமே!

கன்னல் கவிதை மண்டலமே!

இன்னல் அகற்றும் இனிமைத் தென்றலே!

00

தேடிப்பிடித்துத்  தமிழ் அட்சரங்களை

ஓடிப் போகவிடாது ஒன்றாக்கி

பாடிக் களிக்க கவிபுனைய

மூடிவைக்கவில்லை என் எழுதுகோலை

00

கவினுறு கவிதையாய்க் கங்குகரையின்றி

கங்கையாய்ப் பாய கனியவேண்டும் தமிழ்

பனுவல் ஆயிரம் பிறந்து பகிரங்கமாய்

பகுத்தறிவு பெருக பகவானே அருள்வாய் !

00

பகையாளியும் விரும்பும் பண்டிதம் பிறக்கட்டும்

பரிபூரண நிறைவு பனுவலாய் அமையட்டும்

தேனூறும் வரிகளில் தேர்ச்சி;; கொண்ட

தேட்டம் இதுவென திருப்தி நிறையட்டும்!

00

இலக்கணக் கவிதை இலக்கு நோக்கி

இலகுவாய்ப் பிறந்தது இதிலென்ன ஆச்சரியம்!

நேசமுடன் ஏந்தும் நேர்மையான பிரசவம்

பாசமுடன் பிறக்கும் மொழி மழலை.

00 

கவியூற்று – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -21-11-2025



       



சனி, 15 நவம்பர், 2025

538 (1058) தமிழ் தமிழனின் உலகவியல்

 தமிழ் மொழி -47 கவிதைகள் வேதாவின் வலை -1லும்

மிழ் மொழி -33 வேதாவின்வலை  -2லுமாக  5-2-2025ல் 

மொத்தம் 80 கவிதைகளுடன் இது   

 2- வது கவிதையாக வலையேற்றுகிறேன்.

      

      



 தமிழ் தமிழனின் உலகவியல்


அடுத்த தலைமுறை உலகில்

படுக்கிறதா உறவின்றி!  உகந்ததா!

உடுப்பது உண்பது சிறப்பென்றால்

இடுப்பிலிருக்கும் மூன்றாம் தலைமுறை

எடுக்கும் அடி எவ்வாறாகும்.!

00

தடுத்தெறியா மூத்தோர் வழியில்

எடுத்துக்காட்டும் பெற்றோர் தவறினால்

விடுபடும் தமிழ் தொலைவிலாகும்

வடுபடாது வாழ்தல் திறமை

இடுகாடு வரைதானே இவ்வாழ்வு!

00

எனக்கென்ன பயம் எடுத்துக் கூறுவதில்!

தனக்கென ஒரு பாதை அதுவும்

தமிழோடு வேண்டும் தவறில்லையே

அமிழாது வாழவேண்டும் சரிதானே!

இம்மியம் பிசகாத தமிழ் உலகவியல்

00

கவிமணி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்-15-11-2025



                











திங்கள், 10 நவம்பர், 2025

536 (1087) uudakam Eniya Nthavanam

  

          இனிய நந்தவனம் இதழ் ( இந்திய சிற்றிதழ்) கார்த்திகை மாதம் 

கம்போடியா இதழாக - வெளி வந்தது. இதில் கம்போடியா பற்றிய

சிறு கட்டுரை நான் எழுதியது பிரசுரமாகி உள்ளது. இங்கு பதிகிறேன் .

 இனிய நந்தவனத்திற்கு நன்றி.

(கம்போடியா சிறு விவரணம்


கம்போடிய வரலாறு நாகரீகங்கள் மலராத மக்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமாக இருந்த புரோட்டோ சரித்திர காலத்திலிருந்து தொடர்ந்து வருவதாகும். கம்போடிய மன்னர்களின் பட்டியல் பதின்நான்காம் நூற்றாண்டில் முடிவடைகிறது. ஆரம்பத்தில் கம்பூச்சியா என்றது கம்போடியாவாக மாறுபட்டது.

தென்கிழக்கு ஆசிய பிரதான நிலத்தில் உள்ள நாடு. வடமேற்கில் தாய்லாந்து – வடக்கே லாவோஸ்- கிழக்கில் வியட்நாம்  தென்மேற்கில் தாய்லாந்து வளைகுடாக்கள் எல்லைகளாக உள்ளது.

இங்கு பதின்நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.  கி.பி.802ல் இரண்டாம் யெயவர்மன் தன்னை அரசனாக அறிவித்து சென்லாவில் போரிடும் கெமர் இளவரசர்களை - கம்புஐhம் - என்ற பெயரில் ஒருங்கிணைத்தார்.

இதுவே கெமர் பேரரசின் தொடக்கம். முதலில் இந்து மதமாகவும் பின்னர் பௌத்தமும் தென் கிழக்கு ஆசியாவில் பரவ உதவியது.

இரண்டாம் உலகப் போரின் போது ஐப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திற்குப் பிறகு 1953ல் நாடு சுதந்திரம் பெற்றது. நாடு 25 மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டது.

ஊத்தியோகபூர்வ – தேசிய மொழி கெமர் மொழி.

மதம் தேரவாத பௌத்த மதம். 

மன்னர் நேரோடாம் சிஹாமோனி

நாணயம்  - கம்போடிய றியல். தலைநகரம் - புனோம் பென்.

ஆடைத்தொழில்  மிக முக்கியமானது. எண்பது விகிதம் ஏற்றுமதியாகிறதாம். இரண்டாவதாகச் சுற்றுலாத்தொழில் இடம் பிடிக்கிறது. நல்ல கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. 

இவர்களது எழுத்துநடை பல்லவர் காலத்து எழுத்துநடையாக உள்ளதாம்.

அங்கூர்வாட் இந்துக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் கம்போடிய மன்னனால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில்.  தமிழர் கட்டிடக்கலை பல்லவர்  சோழர் வணிகர்கள் மூலம் இந்தியாவை ஒத்ததாக உள்ளது. இராமாயணமும் இராம்கர் என்ற பெயரில் கம்போடியாவில் உள்ளது என்று ஆhய்வில் சொல்கிறார்கள்.

நடனமும் அதன் ஆடை அமைப்புகளும் மிக கவர்சியானது என்றும் தன்னைக் கவர்ந்ததாகவும் அங்கு சுற்றுலா சென்ற ஒரு நடனமணி சொல்கிறார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்பு  இந்தியாவுடன் இருந்துள்ளது இவர்களுக்கு.


ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியர்

வேதா. இலங்காதிலகம்

தென்மார்க் 4-10-2025)

                 -------------------------------------



       


                  






          


வியாழன், 6 நவம்பர், 2025

535 (1086) நேத்திரம் நிறைந்த பரிமாற்றம்.

 

    




     நேத்திரம் நிறைந்த பரிமாற்றம்.


கள்ளமன்றி உரசும் உள்ளத்தின் மொழிகள்

வெள்ளமென நரம்பில் உல்லாச நடனம்.

தள்ளாத கரங்கள் பிணைக்கும் களிப்பில்

உள்ளப் பரவசங்கள்  பரிமாற்ற மொழியானது.


தேனூறும் வரிகளில் தேற்றம் கொண்ட

தேட்டம் இதுவென திருப்தி நிறைந்தது.

நானூறு பின்னல்கள்; நேத்திரம் நிறைக்க

நேர்த்தியாய் மனம் நிறைவு கண்டது.


பற்பல பனுவல் வரைந்தும் பதுமையின்

பசுமை விழிகள் சிற்சில இமைப்பில்

பாசத் தோய்வில் தேனாய் குழைந்தும்

நேசம் சிதையா வலிமை சித்திரமானது 


பா வானதி வேதா. இலங்காதிலகம். தென்மார்க். 6-11-2025



       



ஞாயிறு, 2 நவம்பர், 2025

534 (1085) 7. நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.

   

          


7.  நாலடியார் 25ம் அதிகாரம் -  அறிவுடைமை.

       


(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


7.  நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.


உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம் - புணரின்

றெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமா நோய்.


உணர உணரும் - நன்மை தீமைகளை அறியும்படி ஆராயும் உணர்வு உடையாரை – அறிவினையுடையவரை  புணர – நட்புக் கொள்ள  இன்பம் புணருமாம் - பல வித இன்பங்களும் பொருந்தும்.  தெரிய தெரியும் -  நூற்பொருள்களை அறியும்படி ஆராயும்.   தெரிவு இலாதாரை – அறிவில்லாதவரை.  புணரின் - ஆராயாமல் நட்புக் கொள்ளின் நோய் பிரியும் - அவருறவால் உண்டாகிய துன்பமும் நீங்கும்.

       



எனது வரிகள்:- 


எண்ணற்ற நூல் கருத்துக்களை ஆராயும்

நுண்ணிய அறிவுடையாரை உறவு கொண்டால்

எண்ணிறைந்த இன்பங்களும் சேர்ந்திடும்.

அறிவற்றவரை நூற் கருத்துக்களை ஆராயாதவரை

அறியாது உறவு கொண்டால்  அவரை

விட்டு விலகினால் அவரால் வரும் 

துன்பங்களும் விலகிடும்.

-------------------------------    

வேதா. இலங்காதிலகம். தென்மார்க்  2-11-2025



              



533 (1084) tmil vaan avai

 

             


             


             



               


568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...