7. நாலடியார் 25ம் அதிகாரம் - அறிவுடைமை.
(மூன்றாவது இன்பவியல்.
00
மனதிலே மகிழ்ச்சியை அடைதல்
அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்
நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்
நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)
7. நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.
உணர வுணரு முணர்வுடை யாரைப்
புணரப் புணருமா மின்பம் - புணரின்
றெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமா நோய்.
உணர உணரும் - நன்மை தீமைகளை அறியும்படி ஆராயும் உணர்வு உடையாரை – அறிவினையுடையவரை புணர – நட்புக் கொள்ள இன்பம் புணருமாம் - பல வித இன்பங்களும் பொருந்தும். தெரிய தெரியும் - நூற்பொருள்களை அறியும்படி ஆராயும். தெரிவு இலாதாரை – அறிவில்லாதவரை. புணரின் - ஆராயாமல் நட்புக் கொள்ளின் நோய் பிரியும் - அவருறவால் உண்டாகிய துன்பமும் நீங்கும்.
எனது வரிகள்:-
எண்ணற்ற நூல் கருத்துக்களை ஆராயும்
நுண்ணிய அறிவுடையாரை உறவு கொண்டால்
எண்ணிறைந்த இன்பங்களும் சேர்ந்திடும்.
அறிவற்றவரை நூற் கருத்துக்களை ஆராயாதவரை
அறியாது உறவு கொண்டால் அவரை
விட்டு விலகினால் அவரால் வரும்
துன்பங்களும் விலகிடும்.
-------------------------------
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 2-11-2025



Vetha Langathilakam
பதிலளிநீக்குNanry Pass many for like
3-11-2025
Vetha Langathilakam
Thank you for like sis srinivasalu...
3-11-25
Rama Sampanthan
சிறப்பு வாழ்த்துகள்
3-11-25
Vetha Langathilakam
Rama Sampanthan Mikka nanry bro 3-11-2025
4-11-2025