தமிழ் மொழி -47 கவிதைகள் வேதாவின் வலை -1லும்
தமிழ் மொழி -33 வேதாவின்வலை -2லுமாக 5-2-2025ல்
மொத்தம் 80 கவிதைகளுடன் இது
2- வது கவிதையாக வலையேற்றுகிறேன்.
தமிழ் தமிழனின் உலகவியல்
அடுத்த தலைமுறை உலகில்
படுக்கிறதா உறவின்றி! உகந்ததா!
உடுப்பது உண்பது சிறப்பென்றால்
இடுப்பிலிருக்கும் மூன்றாம் தலைமுறை
எடுக்கும் அடி எவ்வாறாகும்.!
00
தடுத்தெறியா மூத்தோர் வழியில்
எடுத்துக்காட்டும் பெற்றோர் தவறினால்
விடுபடும் தமிழ் தொலைவிலாகும்
வடுபடாது வாழ்தல் திறமை
இடுகாடு வரைதானே இவ்வாழ்வு!
00
எனக்கென்ன பயம் எடுத்துக் கூறுவதில்!
தனக்கென ஒரு பாதை அதுவும்
தமிழோடு வேண்டும் தவறில்லையே
அமிழாது வாழவேண்டும் சரிதானே!
இம்மியம் பிசகாத தமிழ் உலகவியல்
00
கவிமணி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்-15-11-2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக