செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

555 (1055) எப்ஸ்ரின் கோப்புகள்

 

       


                 


                இந்திரன் கெட்டதும் பெண்ணாலே

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே


00

எப்ஸ்ரின் கோப்புகள்

00


படித்தவர்கள் பணக்காரர்களைப் பார்க்கவே

பிடிக்கவில்லை...பயமாக உள்ளது.

பின்னேகும் எண்ணங்கள் வக்கிரமாம்

பெண்ணோடு  சடுகுடு ஆட்டம்!

கண்ணான பாலகரோடு பாலியலாட்டம்

00

கொடூரமான ஆட்டம் மனதில்

கோலோச்சி  உலகையும்  திரட்டியது

கௌதமமுனிவராக இந்திரன் மாறினான்

அகலிகை சாபம் பெற்றாள்

இந்திரனும் கெட்டான் பெண்ணாலே

00

புராணங்களும் காமத்தை முதலாக்கியது

பெண்களைக் கருவியாக்கியது விநோதமல்ல!

எப்ஸ்ரின் கோப்புகளும் அழிந்துபோகும்

காமமும் தொடர்ந்து வாழும்!

கன்னியர் விதியும் இதுவுமாகும்!

00

பாரதி விருது -வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 10-2-2026






1 கருத்து:

  1. Subajini Sriranjan
    நல்லதொரு கவிதை வேதாம்மா
    பல செய்தித் தளங்கள் இதைப்பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்!!!
    Jeffrey Epstein இழிவான செயல்களுக்கெல்லாம் வாய்ப்பை ஏற்படுத்தியும் பல பணக்கார வர்க்கத்தோடு தொடர்பு பட்டுள்ளமையும் மெல்ல மெல்ல வெளிவருகின்றது பல பேரின் தகவல்கள் வெளிவரப் போகிறது என்பது உண்மையே
    எதுவானாலும் இந்தப் பெண் சமூகத்திற்கே பேரவலம் என்பதை நினைத்தால் கசப்பாகவே இருக்கிறது
    யாரை நம்புவது??
    10-2-2026
    Vetha Langathilakam
    Subajini Sriranjan ..யாரை நம்புவது??
    11-2-2026
    Rathy Mohan
    எப்ஸ்ரின் சம்பந்தப்பட்ட தகவல்களும் சம்பந்தப்பட்டவர்கள் விபரங்கள் பார்க்கும்போது யாரை நம்புவது என தெரியவில்லை
    11-2-2026

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...