சனி, 21 பிப்ரவரி, 2026

556 (1056) அலட்சியம் பண்ணுவோருக்கு ஆதரவும் தேவையே!!!!

 

      



      



 அலட்சியம் பண்ணுவோருக்கு ஆதரவும் தேவையே!!!!

00

நடிப்பான உலகம் நயமான வேடம்

துடிப்பாகத் தெரியும் விழித்திரை நாடகங்கள்

அடிவான ஒளியல்ல  மனதிலும் ஈரமல்ல

ஆச்சரிய எடுப்பு  மிளகுக் கனவு

00

விண்ணப்பம் செய்யாத வேண்டாத மழை

கண்ணில் புழுதி கிளப்பும் மணல் மேடு

அண்மிக்கும் நிலை ஒரு சுயநலமோ!

உண்டியலாம் மனதில் நட்பு சேமிப்பில்லை

00

நட்பை மனஉண்டியலில் இடுவதற்கு

நட்சத்திரக் குழுவில் கொஞ்சம் ஒளி

கேட்டு கடிகாரம் கவனமாக முத்தமிடும்

முட்களாக மாறலாமோ அன்பு செய்ய!

00

சுயநல உலகம் தான் பொய்யல்ல

இயங்கும் கபட நாடகம் கவனம்!

தயங்காது துணிந்து முன்னேறு! முன்னேறு!

மயங்காதே பாக்கியமும் நன்மையும் நெருங்கும்!

00

புதுமைக் கவி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -22-2-2026



        



1 கருத்து:

  1. Vetha Langathilakam
    David Samuel
    photo wish
    good --
    Vetha Langathilakam
    David Samuel ..Nanry!!!!!
    22-2-2026

    Vetha Langathilakam
    Pss Manian
    அருமை
    photo wish - thats right
    23-2-2026
    1d
    Reply
    Vetha Langathilakam
    Mikka nanry bro...
    23-2-2026
    Vetha Langathilakam
    Pss Manian
    Vetha Langathilakam நன்றி 🙏
    23-2-2026

    Rathy Mohan
    சிறப்பு
    24-2-2026
    Vetha Langathilakam
    Vetha Langathilakam
    Nanry Latha Babu - 24-2-2026

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...