9.(249) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.
(மூன்றாவது இன்பவியல்.
00
மனதிலே மகிழ்ச்சியை அடைதல்
மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்
நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில் நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)
9.(249) நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை.
கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேற - லருமரபி
னோத மரமற்று மொலிகடற் நண் சேர்ப்ப
பேதமை யன்ற தறிவு.
எனது வரிகள் -
ஒரே சீரான அலைகள் ஆர்ப்பரிக்கும்
குளிர் கடற்துறையுடைய நாட்டிற்கு வேந்தனே!
பலருக்குப் பயன் தரும் நற்காரியம்
இனிதே நிறைவேற பெருமையுடையவர்
அறிவிலார் பின் செல்வது அறியாமையன்று
நற்காரியத்தின் பொருட்டு கல்லாதாருடன்
கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும்
----------



Subajini Sriranjan
பதிலளிநீக்குஅருமையான பதிவு
8-2-26
Rathy Mohan
சிறப்பாக இருக்கிறது
8-2-26
Pathmanathan Viny
சிறப்பு
1w
Reply
Paramasivam Ponnampalam
🙏🏼
8-2-26
Sarvi Kathirithambi
நல்லினிய வாழ்த்துக்கள்.
8-2-2026