கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.
புவியில் பிரசித்தமாய் உலவும்
கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.
உவிதலற்ற தமிழை ஊதி
கவியால் ஒளியேற்றும் உன்னத
சேவைக்கு உயிரீவோர் பலர்.
கிரமமாய் எழுதிக் கிரீடம்
அரவணைப்போர் பலர். திறமையை
வரமாக்குகிறார் நற் பயிற்சியால்.
தரமேற்றுங்கள் தங்கக் கையிணைத்து.
பரவலான வாழ்த்துகள் முற்றத்திற்கு
10-10-2017
கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.
கவி விளையாட்டும் இப்படித்தான்!
கருத்தாய் சொற்களை விசிறியடி!
மட்டையாய் எழுதுகோல் எடு!
வீதியானாலும் பயிற்சி முக்கியம்!
எழுத்து கருத்து பிரதானம்.
ஏழையும் பணக்காரனும் விளையாடும்
மட்டைப் பந்தும் எழுத்தும்
மதியைப் பாவித்து வெல்லலாம்!
உடலிற்கும் மனதிற்கும் உதவும்
பாடமெனும் நிலாமுற்றப் பயிற்சி!
10-10-2017

பதிலளிநீக்குSudha PrabhakaranGroup moderator:- மாறுபட்ட சிந்தனை...
10-10-2017
Vetha Langathilakam :- தலைப்பிற்கும் படத்திற்கும் பொருத்தினேன் மிக்க நன்றி ரசனைக்கு
10.10.2017