நல்லது செய்
(அறிவு) வாசம் தருவது வாசிப்பு.
மோசம் தராத நேசிப்பு
தேசமே நேசிக்கும் தேட்டம்
நாசமற்ற நன்னிலை நாடுவாய்.
00
தீமை செய்யாதே மனிதா
தீக்கதி ( நரகம்) உன்னைத் தேடியே
தீண்டும் தீமொழியும் தீயகமே
தீமைக்கும் என்றும் துணையாகாதே!
00
துரோகம் செய்ய எண்ணாதே!
ரோகமது தொடர்ந்து வரும்.
ரோதனை வாழ்நாள் முழுதும்.
உரோசமும் தொலைந்து போகும்
00
பொல்லாதவர் உறவைப் பொசுக்கு
பொருந்தார் உறவையும் தூரவாக்கு
பொய்யாமையால் பொன்னுலகம் பெறுவாய்
பொறுமையும் அபாயமற்ற சிறப்பு.
00
இறைபக்தி அறம் நாடு!
இசைவாக்கு ஞானத்தை இதமானது.
இச்சையாய் வேதாந்தம் தேடு!
உச்சமாய் உலகில் உயர்வாய!
00
- 26-7-2022

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக