வியாழன், 27 அக்டோபர், 2022

396. (929) காத்திடுங்கள் பழமையை

 



       




காத்திடுங்கள் பழமையை


மொழி இனத்தால் விளைந்த மூலம்

வழி வகுத்தது புலம்பெயர் கோலம்

பொழிலெனப் பூத்த எம்தமிழ்க் கோலங்கள்

சுழிமிகு நவீன மேற்குக் கோலங்களால்

செழிப்பிழக்கும் செந்தமிழ் நாளங்கள்

விழித்துக் காக்கலாமோ நேரகாலத்தில்

00

பழிக்காது பயிலுங்கள் தாய்மொழி மூலங்கள் 

மழிக்காது காத்திடுங்கள் தமிழ்ச் சொற்கோலங்கள்

அழிவுறும் எம் ஆதி மரபுக்கோலங்கள்

இழிவதைத் தடுத்தல் உயரறிவுக் கோலங்கள்

எழிலாம் தாய்நிலை உறவுப் பாலத்தால்

விழிப்புடன் காக்கலாமெம் பழமைக்கோலங்கள்.

00

-27-10-2022 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...