புதன், 20 ஆகஸ்ட், 2025

501 (1043) உமிக் கரி

 

        

     


       


உமிக் கரி


வரம் கொடுத்தால் இறைவன் வரத்தைத்

தர மறுப்பதில்லை கொடுத்ததைத் திரும்ப

எடுப்பது இல்லை. மனிதன் கொடுக்கும் 

வரத்தை தான் மாற்றி அமைக்கிறான்!

00

நெல்லின் கோதுகள் (உமி) நெருப்பிட்ட தணலில்

நல்ல பதமாகச் சுடுபடுவதால் இதமாகப்

பல் விளக்கக் கரியானது. உள்ளங்கையிலிட்டு

எல்லாப் பொழுதும் அக்காலத்தில் பாவித்தோம்.

00

அதிகாலையில்  எழுந்ததும் உமிக் கரியால்

ஆறுதலாகப் பல்துலக்கி முன்வளவில் நடந்து

அது வேறொரு சுக அனுபவம்

மெதுவாகத் தொலைந்த சொர்க்கம் அது!

00

செந்தணல் கவி –வேதா. இலங்காதிலகம். தென்மார்க்-31-7-2025







2 கருத்துகள்:

  1. Sarvi Kathirithambi
    நல்லினிய மறக்க முடியாத நினைவூட்டாலாக இருக்கிறது
    அக்கா.... வாழ்த்துக்கள்..
    20-8-2025

    பதிலளிநீக்கு
  2. Pss Manian
    . ஓ... 👌 அருமையான வரிகளில் ஒரு அழகு கவிதை.! 🌹 🌹
    20-8-2025
    Pss Manian Mikka nanry. Mkilchchy.....urave!!!!!!

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...