வியாழன், 28 ஆகஸ்ட், 2025

504 (1046) (ஊடகம்) - பூவரசு யெர்மனி - அட்டைப் படக் கவிதை...2005

 

      (ஊடகம்) -  பூவரசு யெர்மனி இதழ்அட்டைப் படக் கவிதை...2005



             


பதிலொன்று எனக்குத் தந்துவிடு!


வண்ண மலரிதழ்ப் பெண்மை

கண்ணனே உன் ராதையோ!

சின்ன நூலிடை மென்னசைவில்

எண்ணம் கவர் நடனமோ!

வேரினை ஆழ ஊன்ற

விழுதை ஆதரிப்பவள்

பேரினை வானுக்குயர்த்த

மென்னிறகிகை உயர்த்துகிறாள்

00

அன்று தாய்நிலத்தில் ஊன்றி

இன்றிந்த நிலத்திலும் வேரூன்றி

நன்றெது தீதெது புரியாது

நின்று குழம்பும் பெண்ணவளோ!

மனிதப் பிறவியாய் ஊன்வடிந்து

மாயப் போர்வையில் கலங்குகிறேன்

மானுடம் விட்டு அன்னமாகியொரு

மாண்பு நிலையினைத் தேடுகிறேன்

00

இறைவா! எனக்குக் கைகொடு!

இதிலொரு பாதை காட்டிவிடு!

புதுமலர் உனது பாதத்திற்கு

பதிலொன்று எனக்குத் தந்துவிடு!


வேதா. இலங்காதிலகம்  தென்மார்க். ஆடி- ஆவணி 2005.


     




        

1 கருத்து:

  1. Vetha Langathilakam
    like.-28-8-2025 reply:- Elayathambi Thayanantha....சகோதரா!ஆச்சரியம் தாங்கள் கவிதை பார்ததுள்ளீர்கள்!
    மகிழ்ச்சி. தொலைக்காட்சிகளில் பார்த்த நினைவு. உடனும் முகநூலில் பார்த்தேன்..
    நன்றி...நலமுடன் வாழ இறையாசி கிடைக்கட்டும்.!! (தென்மார்க்கிலிருந்து)
    29-8-25
    Elayathambi Thayanantha
    Vetha Langathilakam பேரன்பும் நன்றியும் 🙏
    29-8-2025
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    வாழ்த்துகள்.
    29-8-2025
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy பேரன்புடன் நன்றி
    29-8-25
    Vetha Langathilakam
    ரா. அமுதா
    அருமை ..வாழ்த்துகள்
    29-8-2025
    Vetha Langathilakam
    ரா. அமுதா பேரன்புடன் நன்றி சகோதரி
    17h
    Reply
    Vetha Langathilakam
    reply to - Navaratnam Giritharan -மிக்க நன்றி. நான் இப்போதெல்லாம் எனது இணையத்தளம் முகநூலுடன்
    நின்று கொள்கிறேன் வேறு எதற்கும் அதிகமாக எழுதுவதில்லை.உடல் நிலையே காரணம்.
    8வது நூலும் செய்துள்ளேன் - சான்றிதழ்க் கவியதிகாரம்-2
    ஜீவநதி வெளியீடு.ஊரில் உள்ளது. எடுத்துவரவேண்டும்.
    நூலகம் ஓர்க் - ல் போடுவார். பார்க்கலாம்.
    வாழ்க வளமுடன்.
    கிரி:- பெரு விரல் அடையாளம்...29-8-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...