https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2133299903912370
அம்மா!.... ( சௌந்தரி ATBC radio)
00
உன் முகம் பார்த்தேன் முதலில்
மென் கன்னம் இணைந்தது உடனே
சின்னக் கரங்கள் தொட்டது மெதுவாய்
அன்பாய் அணைத்தாய் உன் மார்பிலே
00
அம்மாவின் வாசனை வசமாய் இழுத்தது
அகப்பட்டது அமுதமான தாய்பால்
ஆனந்தித்து அருந்திட அருகில் வந்தார்
ஆசை முத்தம் தந்தார் அப்பா
00
முதல் ஆசிரியை நீ உலகை
முழுதாய் அறிந்தேன் இருவரிடமும்
முதலிசை அம்மா உன் இதயத்துடிப்பு
முகம் காணாமலேயே என்னை நேசித்தாய்
00
குரல் குணம் அறியும் முன்பே
தொப்புள் கொடியால் உணவு ஊட்டினாய்
துன்பம் வலியிலென் முதல் சொல்
துள்ளி விழும் அம்மா அம்மாவென்று
00
என் வளர்ச்சியின் இரகசியம் அம்மா
என் முதல் கவிதையும் அம்மா
உலகிலே முதல் தெய்வம் அம்மா
அன்னையருக்கு இன்ப வாழ்த்துகள்
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்.- 8-5-2026 - சௌந்தரி வாசித்தார்.


Vetha Langathilakam
பதிலளிநீக்குDavid Samuel --photo wish...Tham sign
·
GIF
Vetha Langathilakam
David Samuel Mikka nanry.!..vaalka valamudan!!..(chandrothayam)...9-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry satha....(kavithai saranalayam).....9-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குmikka nanry Thaventhiran Kanagaratnam..(rizvzn teabreakkavithai)----10-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry Sujatha.....11-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குJanaki Sreenivasulu
Natarajan Baskaran Mikka nanry....12-5-2026