சனி, 23 மே, 2026

589 (1089) uudakam ATBC .australia -pitivu


     


        https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1528377608684402

( அவுஸ்திரேவிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
பிரிவு
( 3rd poem. is mine .sownthary reading)
ஓன்று பலவாதலும்
அன்றி தனிமையாதலும்
அன்பின்றி பரிவின்றி விலகுதலும்
துன்பம் சிலவேளை இன்பமாகும்.
ஓசையற்ற மௌனமும் பிரிவுதான்
பசையற்ற பூவும் காம்புமாய்.
00
பிரிவை ஏற்கும் மன தைரியம்!
உரியாத திட நம்பிக்கை!
சரியான பாதையைக் காட்டும்!
தரிப்பிடம் வெகு நலமாகும்
சிரிப்பு அச்சுறுத்தலின்றித் தொடரும்.
பிரிவால் உதிரமும் மாறாது.
00
கல்வியால் பொருளீட்டலால் நேரும்
நல்ல பிரிவு நன்மை பெருக்கும்.
பொல்லாத போர் போர்த்தும் பிரிவு
அல்லல் தரும் அவலம் பெருக்கும்.
அல்லும் பகலும் வேதனை காதற்பிரிவு
அவச் சாவிற்கும் அழைப்பெடுக்கும்.
00
சரிவாகும் அன்பு ஆதரவு.
விரியவிடாது மானுடரை
எரிதல் மிகவாகும் அனலாக!
பிரிவு கொடுமை! பாலைவனமானது!
புரிதல் நிறைந்தால் பிரிவு இல்லை.
பிரிதல் குறைவாகும் அன்பு அளவானால்.
00
பிரிவில் கொடுமை குடும்ப உறவில்.
எதிர்பார்ப்புக் குறைந்தால்
பிரிவால் ஏமாற்றம் தவிர்க்கலாம்.
பிரபஞ்சம் என்பதே பிரிவும் இணைவும்.
மரத்தை வெட்டிப் பிரித்தால்
மழை எப்படி வரும்!
00
குறள் - உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மகிழும்படியாகக் கூடிப்பழகி இனி
எப்போது இவரைக் காண்போம் எனப்
பிரிதல் புலவரின் தொழிலாகும்
என்று திருவள்ளுவர் மொழிகிறார்.
00

வேதா. இலங்காதிலகம். தென்மார்க். - 1-5-2026  


        



          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

589 (1089) uudakam ATBC .australia -pitivu

                https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1528377608684402 ( அவுஸ்திரேவிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) பிரி...