தாரதம்மிய( ஏற்றத் தாழ்வு.) உலகு
00
தாய்நாட்டிலும் அயல் நாட்டிலுமேன்
தாரதம்மியமற்ற உலகிலும் இலஞ்சம்
தரித்திரமான கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம்.
தனத்திற்காகப் பண்பை எறியும் பாதகர்கள்.
00
மானம் இழக்க விரும்பாத தன்மானிகள்
மறுபுறம் மாயவேடமிடும் மாட்சிமையற்றவர்.
பூவிரித்த பாதையில் பாடி ஆடுதலல்ல
பூலோகம்- அது நெருப்பில் நடப்பது.
00
கானல் நீர் வாழ்வு தானுலகு
கனவுக் கன்னியர் கையில் புரள்வதல்ல
தூவானம் என்றும் பெருமழையாகாது
வெற்றி என்பதும் பூவாணம் விடுவதல்ல
00
நம்பிக்கையில் காலூன்றி நிமிர்ந்து பார்!
உன் சொந்த எண்ணத்தில் எழு!
விடம் கக்கும் நட்புகளைத் தள்ளு!
விரிந்த உலகில் உயர வழியுண்டு!
00
பணம் புரட்டும் பதவி நாடகம்
பாரையே கேவலமாக்குகிறது
பாகுபாடின்றிப் பாக்கியசாலியாய்ப் பாசாங்கின்றி
பாதம் எடுத்து வைத்து முன்னேறு!
00
கவித்திலகம் வேதா. இலங்காதிலகம். தென்மார்க்- 12-5-2026


Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you k.vimalsekaram...12-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry Rizvan teabreak Kavithai!.....13-5-2026
Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு🙏
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam Mikka nanry Sivam...13-5-2026
கனவுக் காதலன்
Great
Vetha Langathilakam
கனவுக் காதலன் Mikka nanry bro 13-5-2026
கனவுக் காதலன்
Vetha Langathilakam why date 😳
Vetha Langathilakam
Just for rememberence.....
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry Rizvan teabreak Kavithai!.....13-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குMikka nanry.. URAVE M. Aiyappan Pillai ( JAATHUM ure Jaavarum keleer)-.....13-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you sir M.A Ramamoorthy (chennai muthamil sangam).....14-5-2026