வியாழன், 2 மே, 2019

81 . (ஆன்மிகம் - 29) காட்சிக் கவிதை







காட்சிக்கேற்ற கவிதை 

இறையுணர்வு இன்ப மனவழி அமைதியே.
இந்து என்ன! இஸ்லாம் கிறீஸ்தவமென்ன!
இணைப்பது ஒரு வழியே! இன்னல்
இன்னிசையாய் உருவகிக்கும் ஆன்மிக மூவழியாம்.

மயன் அமைத்த சிற்பக் கோபுரமோ!
மாலியுடன் (சூரியன்) போட்டியிடும் ஆன்மிக ஒளியோ!
மான்மியம்! (பெருமை) சலவைக்கல் தாஜ்மகால் பிரதி பிம்பம்.
பளிங்கு நீரில் நீலவான் பின்னணியெழிலோவியம்!

விஞ்சும் ஆதித்தமிழன் சிற்பக் கலையை
மிஞ்ச எவருள்ளாரெனும் வியப்புடையாலயம்.
அஞ்சாதே! ஆண்டவனைப் பிரதி பிம்பமாயென்றும்
நெஞ்சிலமையென்பது தீர்த்தக் கேணித் தத்துவமிங்கு.

காதலொரு வேளை கானல் நீர் நெஞ்சிலெடு!
கல்லறையும் (தாஜ்மகால்) காக்கும் தெய்வமும்
பிறப்பும் இறப்புமாய்ப் பேசிடும் ஞானமோ!
தேவன் கீதமும் இஸ்லாம் ஓதலுமொன்றாக

யேசு நாமமும் தேசு தரட்டும்!
உண்மை பேசி நன்மையாயிருத்தல் மனிதம்!
நீதிக்கொடியேற்றி நிதானமிணை! நிம்மதி நாதமாகும்!

 8-3-2017





1 கருத்து:

  1. Moorthy Nambi :- சிறப்பான வரிகள்
    9 March 2017
    Vetha Langathilakam:- Moorthy Nambi நன்றி உறவே.
    மிக மகிழ்ச்சி கருத்திற்கு.
    9 March 2017

    Gokulan Anantha :- சிறப்பு
    Unlike · Reply · 1 · 11 March at 04:27.
    Gokulan Anantha நன்றி உறவே.
    மிக மகிழ்ச்சி கருத்திற்கு.
    11 March 2017
    எ தங்கமணி:- அருமை
    11 March 2017
    Vetha Langathilakam : எ தங்கமணி நன்றி உறவே.
    மிக மகிழ்ச்சி கருத்திற்கு.
    11 March 2017

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...