பேச்சு
பெண்ணோ ஆணோ பேசும்
கண்ணியமான தமிழ் மனிதரின்
பண்பைக் காட்டுவது உண்மை.
மண்ணை மதிக்கும் பேச்சு
தண்மை தரும் பேச்சு
புண் படுத்தாதுஇ இன்னும்
விண்ணிற்கு உயர்த்தும் தன்மையது.
உண்மையறிவு எண்ணும் திறனுடைத்து
புண்பட்ட மனதில் இயல்பாய்
முண்டியடிக்கும் பண்பட்ட சொற்கள்.
உண்மையை ஏற்பது சிரமமே.
ஆள் பாதியாடை பாதியென்பர்
மொழிஇ பேச்சுமதே போன்றதே.
பேச்சுஇ எழுத்தொரு கலை.
சொற்களை ஆளும் கலை
பேச்சு தெய்வப் பரிசு.
மனிதன் விலங்கின் வேறுபாடு
புனிதப் பேச்சு என்பர்.
சொற்கள் மலரானவை தொடுத்தால்
மாலையாகும் மதிப்பும் ஆகும்.
சிந்தனையின் மறுபக்கம் பேச்சு.
தானத்தில் சிறந்தது நிதானமாம்.
மென்மையான வார்த்தை நிதானமுடைத்து.
பேச்சு வெள்ளியானால் மௌனம் தங்கமாம்.
17-12-2017
Vetha Langathilakam :- சாதாரண பேச்சு உரையாடலும் இங்கு பொருந்தும்... (எதைத் தொலைத்துவிட்டு
பதிலளிநீக்குவிதைக்கப்படுகிறது...அநாகரிக வார்த்தைகள்)
2017
Subi Narendran :- வாய் பேச்சை பற்றி கவிதை வரிகள் அழகாக பேசுகின்றன. //ஆள் பாதியாடை பாதியென்பர் மொழி, பேச்சுமதே போன்றதே// மிகவும் உண்மையான வரிகள். வாழ்த்துக்கள்.
18-12-2017
Vetha Langathilakam:- மிக நன்றி உறவே . கருத்திடலிற்கு மகிழ்ச்சி
மிக மோசமான தொடர்பாடல் நடக்கிறது.
அதை ஊக்குவிக்கும், தாளம் போடுபவர்களும் உள்ளனர்.
இது ஒரு போதை போல வளருகிறது.
கணவரை மதிக்காதவர்கள் தொழிலை மதிக்காதவர்கள் போன்று தான்.
கத்தி பொல்லுடன் நடை பழகுபவர்கள் போன்று தான்.
Subi Narendran :--உண்மைதான்.
18-12-2017.
Geetha Rajagopal:- Arumai
18-12-2017
Maniyin PaakkalGroup admin :- தானத்தில் சிறந்தது நிதானமாம்.
மென்மையான வார்த்தை நிதானமுடைத்து.
பேச்சு வெள்ளியானால் மௌனம் தங்கமாம்/சிறப்பு
20-12-2017
Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு மணி.
மகிழ்ச்சி.