பழைமைக்கு உயிர் கொடுப்போம்
( மட்பாண்டம் - பொதுவாக மண்ணால் செய்யும் பொருட்கள்)
பனையோலைஇ மூங்கிலால் பின்னும்
வினைகளுயர சிறுகைத்தொழில் உயர்த்துவோம்.
மனையொளிர நெகிழியுதைத்து சிறுதானியமுண்போம்.
மட்பாண்டமும்இ சித்தவைத்தியமும் புழங்குவோம்.
காலையிலெழுந்து கடவுளை வணங்குவோம்.
மாலையிலெம் வயலோரம் சிறுவரோடுலாவுவோம்.
வேலையோடு திருக்குறள் ஒளவை
மொழியோடு பழைமை வாழ்வூட்டுவோம்.
ஒருவனுக்கொருத்தியெனும் ஒழுக்க வாழ்வுப்
பெருமையோடு கூட்டுவாழ்வை ஊக்குவோம்.
பெருவிருப்போடு தருக்கள் ஊன்றுவோம்.
சுற்றுசூழல் பாதுகாப்பில் மழையேந்துவோம்.
பாலோடு பழைமையை பசுமையை
பாலவயதில் ஊட்டுவோம்.
ஐந்தில் வளைப்பது ஐம்பதிற்கேகும்.
8-1-201
Subajini Sriranjan:- நல்ல சிந்தனையுள்ள
பதிலளிநீக்குபா நல்ல ஞாபகங்கள் வந்து போகிறது
Vetha Langathilakam
photo thanks
Viny Pathmanathan :- அருமையான பதிவு
2017
Vetha Langathilakam
photo thanks
Subi Narendran:- நல்ல கருத்தினை கூறும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
Sujatha Anton:- ஒருவனுக்கொருத்தியெனும் ஒழுக்க வாழ்வுப்
பெருமையோடு கூட்டுவாழ்வை ஊக்குவோம்.
பெருவிருப்போடு தருக்கள் ஊன்றுவோம்.
சுற்றுசூழல் பாதுகாப்பில் மழையேந்துவோம். அருமையான வரிகள் வாழ்க தமிழ்.!!!!!!!!
2017
Vetha Langathilakam
photo thanks