அழுக்கு வரலாறு ....
நோய் கொண்ட மனிதர்
தீய்கிறார் பிறர் மகிழ்வினால்
ஓய்வின்றிக் காயம் செய்து
ஒற்றுமை ஒரு நோயென்று
கொய்கிறார் பிறர் உயிரை.
கூற்றுவனாகிக் குண்டு வெடிக்கிறார்.
வேற்றுமையில் ஆனந்தித்துக் கொலைத்தலில்
கனதியாம் அதிர்வுகள் காலந்தோறும்
மாற்றவியலா அழுக்கு வரலாறு தொடர்கிறது
மனக் கலக்கமாக உள்ளது.
தினமும் அகங்காரிக்கும் மனங்கள் சாகட்டும்
தனமெனும் உயிர் கிள்ளுக்கீரையாகிறது.
21.4.2019
Vetha Langathilakam :- மனக் கலக்கமாக உள்ளது.
பதிலளிநீக்குகனதியாம் அதிர்வுகள் காலந்தோறும்
தனமெனும் உயிர் கிள்ளுக்கீரையாகிறது.
தினமும் அகங்காரிக்கும் மனங்கள் சாகட்டும்..
2019
Vetha Langathilakam :- உயிர் நீத்தவர்க்கும்,உயிருக்குப்போராடுபவருக்குமாய் அனைத்தும் கடந்த இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.
2019
Gomathy Arasu :- அமைதி நிலவ வேண்டும். கவலை அளிக்கிறது செய்தி கேட்டு
2019