ஏனோ உறவுநிலை....
சிகரத்தில் சிகாமணியெனச் சிங்காரமாய்
சித்த சாந்தியாய் நிற்கலாம்.
சித்திரப்படமாய்ச் சுருளும் வானம்
சிமிட்டும் சின்ன மின்மினிகள்.
காடு தழுவி ஓடும் நதி
காவல் உன் நிழலே
கானல் வரி சொல்லும்
கதிரவன் துளிகளுமே துணை
மானுட நிலத்தில் விசிறும்
மாதவச் சிந்தனைகள் ஒருமை
மனப்போக்கில் ஒதுங்கவிடாது
மனங்கலத்தல் மகிழ்வு தரும்.
பேதலித்த சமூகம் விலக்கி
காதலித்துன்னையே எண்ணியிருத்தல் கேடு.
பாய்விரிக்கும் எண்ணக் கடலில்
பாசமாய்ப் பிள்ளைகளும் படிக்கட்டும்.
மறுபடி மறுபடி உனையெண்ணும்
மனது பூவாக விரியவில்லையே
தானே விரியும் பூவாயின்றி
ஏனோ உறவுநிலை மாறுதே!
28-3.2019
Vetha Langathilakam
பதிலளிநீக்குநிறைந்த சுயநலங்கள் சுவராகி
கறையெனும் சூழ்ச்சி இரவாகிறது.
நிறைக்கும் பணமீன்களே வலையில்
மலைச்சிகரம் எல்லோருக்கும் பிடிக்கும்..
· Reply · 2y
Subajini Sriranjan
மிக அற்புதமான கவிதை வேதாம்மா
வசீகரமான சொற்கள்
2019
Rathy Mohan
அருமையான கவிதை
2019
Jasmin Kennedy
அருமை
2019