கவி போன்ற விழியாளே
கவி போன்ற விழியாளே!
கவின் கலை நடனமே!
குவியும் பாவம் அபிநயமுமே
குரலசைவில் தாளத்துடனசைக்கும் கலையே!
கண்ணாலே அழகியல்இ சமூகம்,
பண்பாடு, கலை, நெறிமுறையுள்
எண்ணம் பரிமாற்றம் தொடர்பாடல்
வண்ணமாக நடனம் அமைத்தல்.
காதலையும் கூறும் காந்தவிழி.
ஆதலாலும் கட்டுடல் அழகவசியம்.
தீதல்ல தெய்வீகக் கலையை
ஓது! முறைப்படி ஓதிடுவாய்!
ஓத்துழைப்புத் தருவேன் கண்மணி.
ஓன்றாகக் கலை வளர்ப்போம்!
ஓப்பீடற்றவுன் அழகில் கரைகிறேன்!
ஒயிலாயருகில் வருவாய் மயிலே!
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 19-4-2016
Gowry Sivapalan ஆம். பெண் குன்றில் விளக்காக.
பதிலளிநீக்கு2018
Vetha Langathilakam:- மிக நன்றி Gowry. மகிழ்ச்சி.
கருத்திடுவதே ஒரு தேவையற்ற செயலாகிவிட்டது இன்று.
2018
Vetha Langathilakam :- கருத்துகள் தரும் உருத்து உங்களது...
விருப்புடன் காத்திருப்பது எங்களது.
பெரும் பொறுமை வேண்டப்படுவது.
அரும் தவம் போனறது அது.
2018
Subi Narendran:- பெண்ணை புதுமைப் பெண்ணாக்கும் புத்தி மதிகள் அருமை. வாழ்த்துக்கள்.
2018
Vetha Langathilakam:- கருத்திடும் உருத்தை
கையிலெடுத்தமைக்கு நன்றி சகோதரி.
மகிழ்ச்சி
2018
5 Comments
பதிலளிநீக்குVetha Langathilakam
கோமதி தாஸ்பிரகாஷ் அருமை வாழ்த்துக்கள் சகோ
20-4-2016
Vetha Langathilakam Mikka nanry - makilchchy sis..
20-4-16
2016
Subajini Sriranjan
அருமையான பா
2016
Vetha Langathilakam
தங்கள்இனிய கருத்திற்கு மிக்க நன்றி.
மனம் மகிழ்ந்தேன்.
Verona Sharmila
அருமை
2016
Rathy Mohan
அசத்தலான பா
2018