ஞாயிறு, 19 மே, 2019

92.. . (671) தேர்தல்







தேர்தல்
ஊர்வதிங்கு அரசியல் தேர்தலா! ஆர்வமுடைய கவித் தேர்தலா! ஊர்முழுதும் பேசும் ஊழலால் கார்மேகம் சூழும் காடைத்தனப் பேர்வழிகள் பங்கெடுக்குமரசியல் தேர்தலா! ஆர்வமுடைய தடாகத்தின் கவிதைத் தேர்தலே எனக்குப் பிடித்ததாகிறது! தேர்வாகாதோ என் தமிழ்! நெஞ்சிலே நீதி நேர்மை தஞ்சமடைந்த மனிதநேயப் பண்பு அஞ்சாத ஆணித்தரக் கொள்கையாளர்கள் விஞ்சும் சமூகசேவைக்காகவும் நல்லாதரவுடன் வஞ்சமின்றித் தேர்தலிற்கு நிற்பார். விசேடமாக வாக்களித்துத் தேர்வாகிறார்கள். பிரதிநிதித்துவக் குடியாட்சிச் செயற்பாடிது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து செயற்படுகிறது. மக்களாட்சிக்கு நடக்கும் தேர்தல் அக்கப்போராகிறது பணப் பட்டுவாடாவில். மக்கள் சேவை மகேசனிற்குரிய சிக்கலற்ற சேவையாக மிளிர்த்துபவனே திக்கெட்டும் புகழ் அடைவான். மக்களின் நல்லாதரவு பெறுவான். அக்கறையாகச் சிலர் இலவசங்களீந்து பக்குவமாய்த் தேர்தலில் வென்றிடுவார். சூதாட்டமெனத் தேர்தலும் ஒரு வேட்டையாகி மாக்களாகிறார் மனிதர். நாட்டை உயர்த்துவோமென நல்லவராக ஓட்டுப் போடுங்கள் என்பார். வேட்பாளர் உண்மையாக நாடாண்டால் பட்டொளி வீசும் நல்லாட்சியைக் கட்டாயமாக நாம் காணலாம். கிட்டுமாவென்பதேயின்று பெரும் கேள்வி. மாசி - 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...