கவிதை இயக்கம்
வண்ண வண்ண அழகுடன்
எண்ணற்ற மலர் மொழிகள்.
எண்ணி வியப்புறும் பாக்கள்
திண்மைச் சரித்திரத் தகவல்கள்
கண்கவரும் காட்சிகள் படங்கள்
கிண்ணம் நிறை உணவுகள்
பண்பாடுடை ஆன்மிகமென சுவாசத்தை
பண்புடனும் நிறைக்கும் முகநூல்
வெற்று நடைபாதை
வற்றிய மனிதமற்ற கள்ளிக்காடு
முற்றும் சுடுகாடு, பாலைவனமாகி
அற்புதச் சோலை வீதி
உற்சவக் கோலம் அழிதலும்
முற்றிய சிந்தனைச் செதுக்குதலே!
பற்றற்ற கோல வண்ணமென்று
பெற்றிடும் பரிசு ஒன்று.
புன்முறுவலில் பாசி, வரண்ட
இன்ப உணர்வின் அடம்
வன்மமாகிப் போலி முகமூடியாகிறது.
புன்னகையிதழ் விரிக்கும் மலர்களும்
தேனீய மறுப்பதில்லை வேண்டியோருக்கு.
என்றும் பேசும்நதி நிறுத்திடாது.
இன்ப நிறக்கலவையான மேதினியில்
என் கவிதையியக்கத்தோடு நானும்!
2-3-2019
Vetha Langathilakam
பதிலளிநீக்குஅழகியல் இயக்கம்
புகைபபட இயக்கம்
எழுத்தியல் இயக்கம்.
2-3-2019
Vetha Langathilakam
நன்றி வசந்தா. ...பார்த்தீர்களா!
இப்பொதெல்லாம் கருத்திடக் கூட
நேரமில்லாத காலமாகிவிட்டது....
2020
Verona Sharmila
அழகியல் அருமை
முற்றிய சிந்தனைச் செதுக்குதலே!
2020
Vetha Langathilakam
கருத்திடல் ஒரு ஊக்கவிப்பு...
ஆழ்ந்த அன்புடன் மகிழ்ச்சியடா!..V.S
2020