திங்கள், 6 மே, 2019

87. (666) . திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!








திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!

உறுதியற்ற உறவுச் சிறகுகள்
இறுக்கமின்றி ஈடாட்டமாய் இதுவரை
நொறுங்கும் கண்ணாடிகளாகத் தான்
வெறும் துரோகங்களாலே இணைந்திருந்ததோ!

காலின்  முள்ளையெடுத்து நகருகிறாம்
காரணத் தண்டனையை ஏற்று
காதலோடு தொடர மறப்பதேன்!
கல்லாகிறது எப்படி இதயம்!

ஆத்ம பந்தம் அன்பென்பதை
ஆத்மார்த்தமாய் மனிதன் உணர்வதில்லை
ஆத்திரம் ஆக்கிரோசம் பெரிதென்று
ஆனந்த பரவசத்தை உரித்துப் போடுகிறான்.

உயிர்த்திருத்தலே அன்பானந்த வாழ்விற்காய்.
உயிராமன்பு நேசத்தைப் பகடைக் காயாய்
உருட்டி வைராக்கியம் வளர்த்தல்
உட்சூத்திரமாதல் உண்மை ஞானமல்லவே!

திமிர் ஆக்கிரோசத்தை உருட்டித்
திரட்டி முறுக்குப் பிழிதலல்ல
திருவுடை  இன்ப வாழ்வு!
திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!

 13-11-2017.


திமிர் ஆட்களை மதிக்காது.
நிமிர்ந்து வயதையும் பார்க்காது
அமிர்தஞ்சீவியும் விடமாய் தெரியும்
சமிர்த்தியும் (நிறைவு) அடையாது.


5-8-2014




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...