ஞாயிறு, 26 மே, 2019

98. (677) ஊடகம் - காற்றுவெளி - பல்லாங்குழி





பழமையாம் பல்லாங்குழி.

புல்லாங்குழலின் துளைகள் போன்று பெரிதாக
பல்லாங்குழியில் பதின்னான்கு துளைகள் கண்டேன்.
வல்லமையாய் என்னாளும் விளையாடும் ஆட்டம்
பன்னாங்குழி என்றும் முன்னோர் அழைத்தாராம்.
பகிரும் காய்கள் பதின்னான்கு குழிகளில்.
பளபளக்கும் சிறு கண்ணாடி உருண்டைகள்
பசுந்தான கடற்கரைக் கற்கள், சோகிகள்,
புளியங் கொட்டைகள். விதைகளும் காய்களாம்.

பாரம்பரிய விளையாட்டு, பாண்டி என்றும்
பாலர் வகுப்பிலும் பாவனை உண்டு.
எல்லாமாக மூன்று வகை ஆட்டம்
பசுவாட்டம், முத்தாட்டம், கட்டாட்டம் என்று
புகட்டுகிறது சிக்கனம், சேமிப்பு, இழப்பென்று.
பல தேசத்தவரும் பகலிரவாய் விளையாடும்
பல்லாங்குழி திண்ணையிலமர்ந்தும் பரவசமாய் ஆடுவார்.
மதிவன்மையுடைய எட்டாயிரமாண்டு பழைமை உடையது.

மண்ணிலும்  ஏழேழு குழிகளோடு ஆடுவது.
மரம் உலோகத்தில் வந்து முன்னேறியது.
மகிழ்ந்து ஆடும்  இவ்  விளையாட்டு.
முன்னைய நல்லதொரு திருமண சீர்வரிசை.
வில்லங்கம் இன்றி ஆட்டம் தொடரலாம் 
அல்லாடும் மனசு ஆட்டத்தில் தவறி
நல்லாய் ஏமாற்றுவோரும் எரிச்சலோடு தொடர்வார்.
வெல்லாவிடில் கோபம் திடீரென வருமே!

எகிப்திய பிரமிட்டிலும் இச்செதுக்கல் உண்டாம்.
ஆபிரிக்கா, சூடான், உகன்டா, கென்யாவிலுமுண்டாம்.
எண்ணும் திறன்இ விரல்களில் இரத்தோட்டம்,
நுண்ணிய கணிதத் திறன் வண்ணமாய்ப் பெருகுமாம்.
இந்தியில் மங்கலா, பிலிப்பைன்ஸ் நாடு
இந்தோனேசியாவில் சொங்கக், சுங்க என்றும்
இது சங்க்யா (எண்ணிக்கை) சமஸ்கிருதத் திரிபாம்.
எழுபது காய்களில் ஆடும் விளையாட்டு

 10-12-2018










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...