https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158658849308984/
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 16/05/20 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்ற "கவிதை பேசும் நேரம்" என்ற வானொலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற வேதா இலங்காதிலகம் - டென்மார்க் அவர்களின் "தயக்கம்" கவிதை
தயக்கம்.
தயக்கம் ஒரு கிருமி
முயற்சியால் அதை உடைத்து
இயங்கித் தன்னிறைவு காணலாம்.
மயக்கமின்றித் தன்னிலையறிதல் தீர்வு
இயங்காத் தன்னம்பிக்கையே பயம்.
தயக்கம் இருந்தால் கொல்!
உயக்கம் (வருத்தம், வாட்டம்) கூடக் காரணம்
தயக்கத்திற்குக் கறுப்புக் கொடி காட்டு!
தியக்கமின்றிக் (மயக்கம்) கட்டுப்பாடை உடை!
வியக்குமுன் பாதையை நீயே முடிவுசெய்!
தயங்காதே கொள்கை கோடென்று
பயக்கும் நன்மை உன்பாதைப் பயணம்.
முயக்காத அன்பால் வந்ததோ
முயங்கினால் தயக்கம் பறக்குமோ
தயங்குவோர் மனதில் இறப்போரே
செயம் காண விடாதோ
துயக்கமின்றி (சோர்வு) கனவு கண்டால்
தயக்கம் தூர ஓடுமோ
15-5-2020
தயக்கம் ஒரு முகமூடி எனலாமோ!
Sothi Manikkam :- மிக்க நன்று!
பதிலளிநீக்குlike -18-5-2020
Sivaneswary Sivarasah :- அருமையான பதிவு.
like
Mariathas Gnanapragasam:- வாழ்த்துக்கள்.
with photo wish..- like
Rasamalar Jeyam :- அழகான கவிதை தயக்கம் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குlike 18-5-2020
Vetha Langathilakam :- இப்போது தான் கவிதை கேட்டேன்.
மகிழ்ச்சி.
மிக்க நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி
தங்கள் கம்பீரக் குரலில: கவிதை நன்றாக இருந்தது.
மற்றைய அனைத்துக் கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள் உரித்தாகுக.-
Nagalingham Gajendiran அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குlove 19-5-2020