வியாழன், 29 ஜூலை, 2021

353. (916.) உரிமையற்ற விருந்தாளி....

 





உரிமையற்ற விருந்தாளி....

00

தன்னம்பிக்கை, முயற்சியால் தகவுறும்

நன்னம்பிக்கை அன்பால் உயர்வுறும்

என்ன நிலையிலும் நெஞ்சத்தை

வன்மை வஞ்சக அரண்மனையாக்காதே!

00

ஞானக் கலப்பையற்று உழுதால்

வானமேகாது சுடுகின்ற யதார்த்தங்கள்

ஆனந்தமாக வாழத் தெரியாவிட்டால்

அது மாபெரும் குற்றம் தான்.

00

அறிவுத் திமிர் அளவானால்

செறிவாகாது வயிற்றெரிச்சல் குணம்.

ஏறிந்திடு ஆதிக்கத் திமிரை!

வறிய நிலையாக்கு போர்க்குணத்தை

00

பொறாமை நிறைந்து பொசுங்காதே!

உறாதவனாயின்றி (பகை நட்பு இல்லாதவன்) அன்பை நிறை!

சிறாம்புதல் (உராய்தல், பிறாண்டுதல்) தவிர்! சிவமயமாகு!

விறாட்டியாகாதே! ஆதரவில் இளகு!

00

அறிவு பூர்வமானது நற்சிந்தனை

முறியும் கெட்ட சிந்தனை உணர்வுபூர்வமானது

எறிந்திடு உரிமையற்ற விருந்தாளி வயிற்றெரிச்சலை!

வெறியுடைய எதிமலைக் குளம்பு அது!

00


 29-7-2021






1 கருத்து:

  1. Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள்
    30-7-2021
    Vetha Langathilakam
    பொன் இராமநாதன்>/////congratz with photo
    2021
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    2021
    Mutthukiddu Navam Vimal
    photo wish
    Vetha Langathilakam
    உங்கள் கருத்துகளை வாசிக்கும் போது மனம்
    மகிழ்வடைகிறது//2021

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு