வெள்ளி, 10 ஜூலை, 2026

603 (1103) அன்பு நதியின் ஈரங்கள்...

 

  


      




     அன்பு நதியின் ஈரங்கள்...

00

உன் அருகாமை பறக்க இசைவு தரும்

அன்னதானமாய்ப் பிரியநதி பாயுதெல்லோ! 

அன்பு நதியின் ஈரங்கள் காய்ந்திடாது

இன்பக் குமிழிகள் இணைந்து ஆடும்

00

வெற்றியோ திருப்தியோ விருந்தோ

சுற்றிச் சுழன்று வரும் நிலையற்றவை

அலைத்தலும் அமைதியும் சிலகாலமே

நிலைத்திட கொட்டிடு வானவிற் பனுவல்களை

00

உயிரோடு கலந்த உள்ளத்தில் உறவு

உணர்வோடு பிணைந்தது தானே!

உல்லாசக் கணத்தில் காத்திராத ஈரம்

உச்சி குளிர ஒரு முத்தம் இன்பமடா

00

கொடுத்து வைத்த கன்னம் மனம்

குழைந்தது அணுவிலும் அசைவு என்றும்

கொட்டும் நாடகமி;து தானே! 

குறுநகை பொங்கும் மங்கலச் சுவடுகள்!

00

சிந்தனைச் சிற்பி – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்- 10-7-2026



       



1 கருத்து:

603 (1103) அன்பு நதியின் ஈரங்கள்...

                 அன்பு நதியின் ஈரங்கள்... 00 உன் அருகாமை பறக்க இசைவு தரும் அன்னதானமாய்ப் பிரியநதி பாயுதெல்லோ!  அன்பு நதியின் ஈரங்கள் காய்ந்...