திங்கள், 11 பிப்ரவரி, 2019

19 . (608) காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை







காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

காலவுருவாக்கம் கோள்கள் நட்சத்திரங்கள் செயற்பாடு
காலத்திற்காய்க் காத்திருந்து தூற்றுகிறார் காற்றோடு.
காலம் நேரமற்ற இயக்கமில்லை உலகில்.
காலம் பொன்னே கருத்தோடு பயனாக்கினால்.
நேரங்காட்டியாய், நீராய் ஓடும் காலம்
பிரசவம் மரணத்துள்ளே சக்கரமாகும் காலம்.
அரங்கேறும் காலக் குறியீடுகள் பிரதானம்.
வரலாற்றுக் குறிப்பிலிடும் அவசிய அங்கம்.

விநாடி, நிமிடம், மணி, நாள்
விரியும் காலை, மாலை, பகல்
விதிக்கும் வாரம், மாதம் வருடம்
விரக்தி, ராகு, கேதுவாமேராளப் பகுப்பு.
பனிக்காலம் மெல்ல நகர பதுங்குகிறோம்.
வேனில் கோடையில் காதற் களிப்பாயுல்லாசிக்கிறோம்
வேதனை தீர்க்கிறதுழவனுக்கு மாரி காலம்.
வேம்பாகிறது நலமற்று நழுவும் காலம்.

காலமொரு கடமை வீரன்! தீமையும்
நன்மையும் பாராதது. காலத்தே பயிரிடலவசியம்!
நகரும் காலத்தால் வளர்ந்து தேய்கிறோம்.
நல்ல துணையிருந்தாலில்லறமும் நந்தவனக் காலம்.
காத்திரமான துன்பங்களைக் காலம் குணப்படுத்தும்
சூத்திரமாகவே நாளைக் காலமென்று எடுத்து
' நாள் செய்வது நல்லோர் செய்யா ' ரென்றார்.
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை – நாமிருப்போம்.


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-2-2018



*************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...