சனி, 16 பிப்ரவரி, 2019

22 (611) .தேவரகசியத் தூக்கம்.








தேவரகசியத் தூக்கம்.

மூடிய இமைக்குள் மூங்கில் வனம்
மூடுமந்திரம் பேசும் மூக்குத்திப் பூக்கள்
மூட்டம் இல்லாத மேக நீலம்
மூலை  முடுக்கிற்கு கதிரிட்டது மூளை.

சுடரும் சுழலுமான சுதந்திர மனவோட்டம்
சுகமான கோழியிறகு  சொகுசுப் போர்வை
சுகிக்காது இமைமூடி சுழலும் மனம்
சுற்றுகிறாள் நித்திராதேவி வட்டமடித்துத் தூரமாய்

பேசாமல் தூங்காது பேயாய் அலைந்து
பேரலை போல பாயாது மெதுவாக
பாம்பு  மாதிரி பாசியில் அசைந்து
பம்மாத்துக் காட்டுது விழி மூடாது.

தேவார திருவாசகம் துணை வருமா!
தேக்கமின்றி  இமைகளை தூக்கம் இணைக்கட்டும்.
தேம்பும் மனமோ  தேடலோ இல்லை
தேவதைச் சிறகு தேவரகசியமாக அணைக்கட்டும்.

வேதா. இலங்காதிலகம். பா வானதி
டென்மார்க்.  15-2-2019.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...