திங்கள், 25 பிப்ரவரி, 2019

32. (618) வாழ்தல் ஒரு சவால்







வாழ்தல் ஒரு சவால்

தீராமை- ஆற்றாமை, கொடுமை. தூர்த்தல்- அடைத்தல், மறைத்தல். )

வாழ்தல் ஒரு சவால்
போழ்தல் இணைதல் வாடிக்கை.
வீழ்தலைப் பார்த்தல் வேடிக்கை.
.மூழ்தல் நம்பிக்கை ஊன்றுகோல்.
தாழ்தல் ஒரு கண்காட்சி.
சூழ்தல் தாராளமான துன்பமே.

போர்க்கள வாழ்வை மாற்றிட 
சாராம்சம் ஆராய்ந்து சீராக்கிடு!
தீராமை தூர்த்தல் செய்து
போராடிப் பார் சோர்ந்திடாது!
ஊராருக்கும் உதாரண வாழ்வை
ஆராதிக்கும் தோராயத்தில் அமைப்போம்.

போராளிகள் நாம். போராட்டத்தில் 
நேராக நேர்மையாய் தேரோட்டி
வேரோடிய பண்பாடு காப்போம்.
வைராக்கியமாய் ஒருவனுக்கு ஒருத்தியாய்
தூரமாய்த் துன்பங்கள் துரத்தி
பாராட்டுடன் வாழ்வைப் பூவனமாக்கலாம்.

ஆராத போராட்ட ஆடுகளம்.
ஆசை மேடையொரு ஆயுதகளம்.
ஆசைக்கு இடு கடிவாளம்.
ஆடும் வாழ்க்கையொரு முறையே
ஆளுமைத் திறமையின் ஆலாபனையிது.
ஆற்றலின் வெற்றியே வாழ்வு.  

23-3-2018










1 கருத்து:

  1. Anu Raj :- போர்க்கள வாழ்வை மாற்றிட
    சாராம்சம் ஆராய்ந்து சீராக்கிடு..

    நல்வாழ்த்துகள்..

    கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம்:- தூரமாய்த் துன்பங்கள் துரத்தி
    பாராட்டுடன் வாழ்வைப் பூவனமாக்கலாம்....சிறப்பு.

    Vetha Langathilakam :- Mikka nanry

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...