தந்தையாகி தலைவனுமாகி
தந்தையாகி தலைவனுமாகி
முந்தைப் பிறவியேந்திய புண்ணியத்தில் நல்ல
தந்தையாகிப் பிள்ளைக்குத் தலைவனாகிக் குடும்பத்திற்கு
அந்தகாரவுலகில் ஆதவனாய் ஒளியூட்டி ஆதி
அந்தம் வரை குடும்ப நேச
பந்தம் காவும் பாசமுடைய பெருஞ்சொந்தமப்பா.
பிள்ளைக்காக அனைத்தையும் தாங்குபவன் இங்கு
கொள்ளை மழையையும் தான் வாங்கியுயிர்க்
கிள்ளைக்காய்ப் பெருங்குடைப் பாதுகாவலனாகிறான்.
தெள்ளிய காட்சியிது தனை ஈந்து
அள்ளியன்பு சொரியும் தந்தையாகிய தலைவன்.
உயிர் உடலாய் ஒன்றானவன் தந்தை.
அன்பு அருளீய்ந்து நிற்பவன், நிறைந்தவன்
தென்புடன் தோளில் ஏந்தியே நடப்பான்.
அன்புடன் யானையின் அம்பாரி தோளானவன்.
என்ன கேட்டதும் வாங்கித் தருபவன்.
முளைத்தெழும் உயிரசைவின் முகிழ்வாம் தந்தையன்பு.
கிளைத்து பெருகித் திகழ்தல் இறையாணை.
இளைத்தலின்று கட்டற்றுப் பெருகுதல் இயல்பு.
விளைவு பிள்ளையகத்திலூன்றும் முதலறிதல் சித்தியடைதல்.
களைப்பற்றுத் தெய்வமிறங்கி வந்தாடும் களியாட்டாகுமிது.
கருவில் சுமந்தவளம்மா, தன் நெஞ்சில்,
உருவில் சுமப்பாரப்பா, அரவணைக்கும் ஆளுமை.
திருவான பிள்ளையின் முதற் கதாநாயகன்.
பெருமுயிரின் முகிழ்வு தந்தைப் பாசம்.
அருமையுறவின் நற்சொற்கொடையாகிறானிவன் தந்தையாகி தலைவனுமாகி.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-6-2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக