திங்கள், 25 பிப்ரவரி, 2019

33. (619) தடை அதை உடை








தடை அதை உடை

தடை அதை உடைக்க
விடை  தன்னம்பிக்கை  மேடை.
அடை இயலாமைக் கடை.
குடை  உன்னூக்க நடை.
தேரோடும்  பெரும் சாதனைக்காய்
போராடு தினமும்!  ஏன்
நீராடுகிறாய்  கவலைக்  குளத்தில்!
யாரோடு கோபம் உனக்கு!

ஏரோடும்  போராட்டம் விவசாயிக்கு
ஊரோடு  போட்டியிடு  நேர்மைக்காய்
கூராக சிந்தி  செயலெடு.
சீரோடு  நன்மை  செய்.
வேரோடு  உறவுகளை  இறுக்கு
பேரோடு  புகழ்  பூக்க
நேரோடு  தருமம் விதையது
நீரோடு  அடித்துப்  போகாது.

நாரோடு பூவான நல்லோரிணைவு
தூரோடு   நன்மை  பொழியும்
வீரமிகு மன எண்ணத்தால்
வீசுதலாகும்  தடைக்  கற்கள்.
வேதனைகள் வெந்து  அழியும்.
சூரியன்  நதியின்  தடையற்ற
கடமை உணர்வாய் இயங்கு!
தடைகள் உடைபடும் வெற்றியுனதே!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-6-2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...