நம்பிக்கையா! மானுட நட்பா!
நம்பிக்கை நட்பாகி வாழ்வின்
நளபாகம் கொண்டு நகைமுகமாக்கி
நங்கூரமாகிறது. பிற நட்புகள்
நசையுறு தென்றலாகி அசைந்தும்
நடமாடியும் நடித்தும் செல்கின்றன.
நட்பினை ஒதுக்கி நன்மைகளை
நணுகாது நழுவுவோர் எப்படி
நந்தாவிளக்காக மனதில் குடிபுகுவார்!
நந்தியாவட்டம் பூவாமே நட்பு!
நம்ப முடியவில்லை சில தருணங்களில்
6-2-2019
வேறு
நம்பிக்கை.
உயிரணைப்பின் ஆதரவு வேர்.
உயிரின் பலமான ஊன்றல்.
உணர்வின் கூட்டுச் செழிப்பு.
உலக முன்னேற்றப் பலம்.
அன்புருவம் எதிர்பார்ப்பின் நிமித்தம்
தென்பான கருத்தாய் ஊன்றும்
தன்முனைப்பான நல்லெண்ணம்
மின்னும் நல்லபிப்பிராயம் நம்பிக்கை.
மன இராச்சியம் வளர்க்கும்
மன்பதையின் அமுத தேவகானம்
மருள் நீக்கும் மந்திரம்
மனித வேதம் நம்பிக்கை.
நம்பிக்கை வழியது வாழ்வு
தென்பற்றது அஃதிலா நீள்வு.
நம்பிக்கை பலமுடை நெம்புகோல்
அஃதிலா வாழ்வு பாழ்.
நம்பிக்கையோடு கையிணைப்போரை அன்புத்
தும்பிக்கையால் தாங்குவோர் நல்லோர்.
வீம்பின் கை ஓங்கினால்
நன்நம்பிக்கை மரிக்கும்.
இதயத்து ஊனம் பொசுக்கும்
உதயத்து வெள்ளி நம்பிக்கை.
நம்பி – கை வைக்கும் செயல்
எம்பி இமயம் தொடட்டும்.
16-6-210011.
நன்றி
சிந்தை மகிழ்ந்திட தொகை வரிகளென்று
தந்துமே திறனைக் காட்டுதல் நன்று
வந்திடும் வரிகள் மாந்தி அனுபவித்தீர்!
தந்திடும் குளிர்மை வரிகள் சிந்தையினிக்கிறது!
(புனே தமிழ் சங்கம்.) 8-10-15
Rathy Mohan :- நட்புக்கு நயமான வரிகள்..
பதிலளிநீக்கு2019
Vetha Langathilakam :- மகிழ்ச்சி.....ஆழ்நத அன்பு உறவே
2019
Subajini Sriranjan :- அருமையான பா
2019
Vetha Langathilakam :- மகிழ்ச்சி.....ஆழ்நத அன்பு உறவே
2019
Sujatha Anton நம்பிக்கை நட்பாகி வாழ்வின்
நளபாகம் கொண்டு நகைமுகமாக்கி
நங்கூரமாகிறது. பிற நட்புகள்
நசையுறு தென்றலாகி அசைந்தும்
நடமாடியும் நடித்தும் செல்கின்றன.
அருமை முற்றிலும் உண்மை. முன்னிற்கு முகம் கொடுத்து பேசுவதிலும் ஒருவித நடிப்பை வெளிப்படுத்துபவரும் உண்டு.
2019