உறவுநிலை -1
உறவுநிலை அகங்கொண்ட அன்பின் வழியதே
உறவு உறை மூடிய வீணையல்ல.
உறவுக்கு இல்லை அடைக்குந் தாழ்.
உறவின் விதைப்பு அன்பில் கரைதலே.
உறவெனப்படுவது அழியாத அன்பு வழியே
பிறருக்காக வேலியிடுதல் மதிலிடுதல் இழிவே!
உறவேயுனை இனி பார்க்கேன் பேசேன்
திறவேன் இனி உன் வாசலென
உறவுப் பட்டக் கயிறு அறுத்து
உறவை அழிக்கப் படை திரட்டி
துறக்கும் உறவு எண்ணங்களை வாரிசுகளிற்கும்
சிறக்க தொற்ற வைத்தல் சிறப்போ!
வேதா. இலங்காதிலகம்(கோவைக்கவி)
டென்மார்க் 12.2.2019
உறவு-2
உறவு நடிப்பாகினால்
உதறுதல் நன்றாகும்.
உடனிருப்பதில் அருத்தமென்ன!
நெருங்காத மனங்களாலிதயம்
வருந்த வேண்டாமே!
துரோகத்தின் காலடிகள்
துவம்சமாக்கும் பாதையை.
உறவின் அரும்பெருமைகளை
பறக்க விடுதலால்
இறக்கிறது உறவுன்னதம்.
உறவு ஊனின்
உள்ளுறையும் ஆணிவேராய்
உணர்வெனும் பண்பிற்கு
ஆதாரமாய் உள்ளது.
உடலையும் வாழவைக்கிறது.
20-12-2015
உறவு-3
உறவு என்பது இனிய பந்தம்.
உறவே பணமாய் நினைக்கும் சொந்தம்
அறவே ஒருவனைப் பிடுங்காத சொந்தம்
கறவை மாடாய்ப் பார்க்காத பந்தம்.
நறவு சிந்தும் அன்பு சொந்தம்.
பிறவி சிறக்க இன்பம் சிந்தும்.
உள்ளம் துள்ள நிறையுமொரு
கள்ளமில்லா உறவு – பெரும்
வெள்ளமென நம்பிக்கை தரும்.
தௌ;ளிய நம்பிக்கைப் பொழில்.
பள்ளத்தில் வீழ்ந்து லாழ்வில்
வள்ளமாகும் வையக ஆழ்கடலில்
6-9-2004
( கார்த்திக உறவு இந்திய சிறு சஞ்சிகையில் 2004 பிரசுரமானது.
உறவு-2
உறவு நடிப்பாகினால்
உதறுதல் நன்றாகும்.
உடனிருப்பதில் அருத்தமென்ன!
நெருங்காத மனங்களாலிதயம்
வருந்த வேண்டாமே!
துரோகத்தின் காலடிகள்
துவம்சமாக்கும் பாதையை.
உறவின் அரும்பெருமைகளை
பறக்க விடுதலால்
இறக்கிறது உறவுன்னதம்.
உறவு ஊனின்
உள்ளுறையும் ஆணிவேராய்
உணர்வெனும் பண்பிற்கு
ஆதாரமாய் உள்ளது.
உடலையும் வாழவைக்கிறது.
20-12-2015
உறவு-3
உறவு என்பது இனிய பந்தம்.
உறவே பணமாய் நினைக்கும் சொந்தம்
அறவே ஒருவனைப் பிடுங்காத சொந்தம்
கறவை மாடாய்ப் பார்க்காத பந்தம்.
நறவு சிந்தும் அன்பு சொந்தம்.
பிறவி சிறக்க இன்பம் சிந்தும்.
உள்ளம் துள்ள நிறையுமொரு
கள்ளமில்லா உறவு – பெரும்
வெள்ளமென நம்பிக்கை தரும்.
தௌ;ளிய நம்பிக்கைப் பொழில்.
பள்ளத்தில் வீழ்ந்து லாழ்வில்
வள்ளமாகும் வையக ஆழ்கடலில்
6-9-2004
( கார்த்திக உறவு இந்திய சிறு சஞ்சிகையில் 2004 பிரசுரமானது.
Subajini Sriranjan:- அழியாத அன்புதான் உறவு
பதிலளிநீக்குஅழகான பா
Vetha Langathilakam:- ஆழ்ந்த அன்புடன் மகிழ்வு Suba...
2019