ஞாயிறு, 25 ஜூலை, 2021

352. ( 915) குறையால் நிறை அழிகிறது

 



                               54th  wedding anniversary


குறையால் நிறை அழிகிறது

00

நன்கு தூங்கினால் இருளை

வென்ற தடமழியும். துன்புறுத்தும்

சிறுமனம் முரணாகித் துரத்தினால்

தூக்கமும் தூரமுற்றுத் துயருறும்.

வாழ்வு, இடைஞ்சல், பொருளாதாரம்

ஆழ்தலாகும் நோவின் அழுத்தத்தில்

ஆழ்வார் பாசுரமும் ஆரோகணிக்காது.

ஆதரவும் அன்பும் அத்துவானமாகும்

00

நாட்களை வெறுமையாய் நகர்த்தாது

நிகழ்வுகளால் சருகை இழையை

நிதானமாய்ப் பின்னு! இன்பித்திரு!

நிரந்தரமற்ற வாழ்வைத் துன்பமாக்காதே!

வலி தாங்க முடியாவிடிலும் 

கிலி பிறருக்குக் கொடுக்காதே!

மலிவான பிறவியாகி எதற்குப்

பலியாக்குகிறாய் பிறர் அமைதியை!

00

மனது வேண்டும் விதம்

ஆனந்தமான ஆன்ம ஒவியம்

எதிர்கால இரகசியம் தெரியாது

எதுவென விரல்கள் பின்னிட மகிழ்ந்திரு!

நிறை அழிகிறது குறையால்.

சிறை உடைத்து மனக்

கறை துடைக்கும் கதிர்

இறை நம்பிக்கை நம்பு

00

12-7-2021









2 கருத்துகள்:

  1. Dhavappudhalvan Badrinarayanan A M
    வாழ்த்துகள் சகோ. மிகவும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்கள் பதிவு. 💐🙏12 -7 -2021

    பதிலளிநீக்கு
  2. Denmark Shan Subramaniam
    நன்று. வாழ்த்துகள்
    12-7-2021
    Sujatha Anton
    நாட்களை வெறுமையாய் நகர்த்தாது
    நிகழ்வுகளால் சருகை இழையை
    நிதானமாய்ப் பின்னு! இன்பித்திரு!
    நிரந்தரமற்ற வாழ்வைத் துன்பமாக்காதே!
    வலி தாங்க முடியாவிடிலும்
    கிலி பிறருக்குக் கொடுக்காதே!
    மலிவான பிறவியாகி எதற்குப்
    பலியாக்குகிறாய் பிறர் அமைதியை!
    அருமை வரிகள் புகைப்படம் அருமை.
    4y
    Reply
    Sujatha Anton
    together lovely pic.
    12-7-21
    Mutthukiddu Navam Vimal
    GIF may contain beautiful, flower and rose
    12-7-2021
    Sarala Vimalarajah
    அருமை வாழ்த்துக்கள் அக்கா
    2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah Anpudan makilchchy....
    2021

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...