நீள்தவ மனம்
இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
அன்பி னிராகமாய் அனுராக கீதமாய்
இன்னிதழ்களின் எழில் மிகு நடனத்தில்
மென்னகை புரிவது கண்களில் நிதர்சனம்.
00
வினை மனப் போரின் வில்லங்கப்
பினைதலில் கொடும் விதியெனச் சொல்லும்
புனைவில் மனம் இறுகாத இளகிய
நினைவே இன்பம் சேர்ப்ப தியல்பு.
00
பயமடையாத தன்னம்பிக்கைத் தூணாம் மனம்
சுயம் அழியாது காக்கும் தனம்.
யெயம் காணத் துடிக்கும் தினம்
நயம் ஒன்றே விரும்பும் மனம்
00
முழுமதி – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 24-10-2025



Vetha Langathilakam
பதிலளிநீக்குPss Manian
அருமை - awasom photo wish
26-20-2025
Vetha Langathilakam
Pss Manian mikka nanry.
26-10-2025
3d
Reply
Vetha Langathilakam
Pss Manian
Vetha Langathilakam நன்றி
26-10-2025