புதன், 29 அக்டோபர், 2025

532 (1083) அறிவாளர் பலர் உலகில்!

 

           



                


அறிவாளர் பலர் உலகில்!

00

ஒருவரை யொருவர் மதித்து

பெருவிருப்போடு  மரியாதை செய்தல்

அருமைப் பண்பாகும் அத்துடன்

திருவுடை முதியோரை மதித்தல்

புருவமுயர்த்தும் இனிய பண்பு!

ஒருமுறை நீயும் முதிர்வாய்!

00

விருப்புடன் கேள்விக்குப் பதிலிடு

பெரும் அலட்சியம் அகந்தையாகும்

புகழும் சபையின் மதிப்பு

பண்பை அகத்தில் நிறைக்கட்டும்!

பெருமையில் தலைப்பாரம் கேடாகும்

கருமையாகும் தலை கவிழ்தல்

00

அறிவுரைகள் ஆதாயம் நிறைந்தது.

சிறிதாவது மதித்து நடந்திடு!

செறிந்த உலகில் நீமட்டுமல்ல

அறிவாளர் பலர் உளர்

அறிவுறுத்து மனதுக்கு சமநிலை!

உயர்நிலை! மானுடநீதியின் உயிரிழை!

00

கவித்தாமரை –வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்-29-10-2025



            



1 கருத்து:

  1. Rathy Mohan
    சிறப்பு
    Well Done Applause Sticker
    29-10-2025
    Vetha Langathilakam
    Rathy Mohan Mikka nanry...vaalka valamudan.



    Kanagasegaram Vimalasegaram
    29-10-25
    Vetha Langathilakam
    Kanagasegaram Vimalasegaram nanry.
    29-10


    Pathmanathan Viny
    நன்று
    29-10-2025
    Vetha Langathilakam
    Pathmanathan Viny mikka nanry



    Janaki Sreenivasulu
    அருமைமிகு நயஉரை.🙏சகோதரி
    29-10
    Janaki Sreenivasulu
    மானுட நீதியின் உயிரிழை அருமை சகோதரியின் அறிவுரை
    29-10
    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu Mikka nanry sis



    Sandradevi Thirunavukkarasu
    அருமை

    Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu mikka nanry - makilchchy
    29-10-2025


    Subajini Sriranjan
    நல்லதொரு ஆக்கம்
    29-10-2025
    Vetha Langathilakam
    Subajini Sriranjan mikka nanry sis. vaalka valamudan
    29-10-2025


    Kalanithy Jeevakumaran
    அருமை அக்கா. தலை கனப்பதுதான் உலக மகா பிரச்சனை. நல்ல அறிவுரை.
    8h
    Reply
    Vetha Langathilakam
    Kalanithy Jeevakumaran பேரன்புடன் மிக்க நன்றி சகோதரி
    29-10-25


    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    மிக அருமை................... வாழ்த்துகள்.
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy mikka nanry...vaalka! vaalka! 29-10-2025

    Vetha Langathilakam
    Pss Manian
    அருமை
    photo wish with - nice -
    Vetha Langathilakam
    Pss Manian ..பேரன்புடன் நன்றி ஐயா!
    வாழ்க வளமுடன்!.....29-10-2025

    Vetha Langathilakam
    Pss Manian
    Vetha Langathilakam நன்றி வணக்கம் 🙏
    Vetha Langathilakam
    photo thanks - feeling greatfull -29-10-25



    Vetha Langathilakam
    ரா. அமுதா
    அருமை ..வாழ்த்துகள்
    photo wish with flowers
    Vetha Langathilakam
    ரா. அமுதா பேரன்புடன் நன்றி
    வாழ்க வளமுடன்!.....29-10-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...