திங்கள், 2 மார்ச், 2026

558 (1058) ஊதுபத்தியான கவி வரிகள்!.....

 

       





 ஊதுபத்தியான கவி வரிகள்!.....

00

பூக்கள் அணிவகுத்த அழகிய மாளிகை

பாக்கள் புனைய வைக்கும் செடி கொடி

பச்சைக் கடலில் மிதந்து சுகிக்கிறேன்

இச்சையோடு எழுதுகோல் விழிக்கிறது மொட்டவிழ.

அச்சமின்றி உயர எண்ணுகிறது கவிதை

மெச்சும் என் உயிரான பனுவல் அரண்மனையை

உச்சமாக இரசிக்கிறேன் இரசனைத் தேனீயாக

உச்சி குளிருது பறவைகளின் ஆர்மோனியத்தால்

00

இதயமாம் என் வானக் கிண்ணத்தில்

பதமான தாரகைச் சொற்கள் நிறைத்து

விதவிதமாகக் காதல் விளக்கு ஏற்றினேன்

மிதமாக நரைத்த மலைத்தலை பாலருவியாக

நிதமும் பாய்கிறது பூமி குளிர

மழையின் இசையென்று மலர் தலையாட்டுது

இழைந்த நீல இரவின்நீள் முத்தமாக

குழைந்த கவி வரிகள் ஊதுபத்தியாக.

00

கவிச்சுடர் - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 26-2-2026



     




      



2 கருத்துகள்:

  1. M.A. Ramamoorthy
    அருமை...
    "இதயமாம் என் வானக் கிண்ணத்தில்
    பதமான தாரகைச் சொற்கள் நிறைத்து
    விதவிதமாகக் காதல் விளக்கு ஏற்றினேன்
    மிதமாக நரைத்த மலைத்தலை பாலருவியாக
    நிதமும் பாய்கிறது பூமி குளிர
    மழையின் இசையென்று மலர் தலையாட்டுது
    இழைந்த நீல இரவின்நீள் முத்தமாக
    குழைந்த கவி வரிகள் ஊதுபத்தியாக."
    வாழ்த்துகள்.
    28-2-2026
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy மகிழ்ச்சி . பேரன்புடன் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தேடித் தேடி இணைக்கும்
    தேட்டமிகு வரிகள் தான்
    ஊட்டமான ஊதுபத்தி வரிகள்!
    வாட்டம் போக்கும் வாசனையில்
    நாட்டம் உண்டாகவில்லையோ!!....3-3-2026

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...