அடுக்குமாடி 14 AUH
00
அறுவை சிகிச்சைப் பிரிவாம் அந்த
ஏழாம் மாடியில் இருந்து பார்த்தால்
அடுக்குமாடி 14 ஓகுஸ் யுனிவாசிட்டி கொஸ்பிட்டல்
எந்தளவு பிரமாண்டம் மண்ணிற நிறம்.
00
பறவைகள் குறுக்காகப் பறப்பது பசிய
பச்சை மரம் தேடலாக இருக்கலாம்!
பரிபூரணனின் இயற்கைப் படைப்பின் அதிசயம்!
பல் சிந்தனையின்றி நிதானமாகப் பறக்கிறது.
00
வானம் தொட சிறகசைக்க வில்லை
வசமாகிறேன் வெண்மை சிறகசைப்பின் அழகில்
வயப்படுத்தும் எண்ணமற்ற அதன் முயற்சி
வானுயர் சுவரின் மௌனம் பறவை
என்னை மறக்கிறேன்.
00
கவிச்சாகரம் வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -24-3.2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக