https://www.facebook.com/sownthary.sivananthan/videos/2389021425202726
சிட்னி வானொலிக் கவிதை.
எனது மூன்றாவதாக வாசிக்கப் பட்டது.
இங்கு வரிகளில் தரப்பட்டுள்ளது
இன்று - 10-10-2026
அனுபவக் கிரீடமிடும் நரை முதுமை
¤¤
முதுமை ஆயுட்காலத் தூது
பதுமையான பருவம் உயிர்களுக்கு.
இது மலர்தூவி வரவேற்கும்
மேதகு விளையாட்டிடம் அல்ல.
¤¤
முதுமை வாழ்நாளின் பத்மாசனம்.
பொதுமைப் பேரறிவுப் பசுமை.
புதுமையல்ல கொடும் விலங்காக
மெதுமையாகச் சிலரைக் கைதாக்குகிறது
¤¤
கட்டுடலின் அட்டகாசங்கள் படமாகும்
கட்டம் - அட்டாவதானங்கள் அடங்கும் இராச்சியம்.
கொட்டமடித்த இளமை தொலைந்ததால்
அள்ளியணைக்கும் நினைவு அருகிலிருந்தும் மறக்கும்.
¤¤
கனமான இளமை மிடுக்குத் தவறுகளைத்
தினம் எண்ணி மறுகுவர். பிறருக்கு
முதுமரநிழலில் செதுக்கிய அனுபவங்களை
முன்மாதிரியாகச் செம்மையாய் வழங்கலாம்.
¤¤
வயோதிபம் அந்திம சங்கம நிலையம்.
நங்கூரமிட்ட மனித சக்திகள்
சங்கூதித் தளரும் சித்திகள் - நீங்கள்
தாண்டிய தாராள வாழ்வில் நிறைந்திருங்கள்.
¤¤
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 9-10-2026


Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு·
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Reply
Paramasivam Ponnampalam Mikka nanry..Sivam...10-10-2026
Mani Panchalingham....Thank daa.....10-10-2026
பதிலளிநீக்குVasantha VJ
பதிலளிநீக்கு·
வாழ்வின் தேட்டங்கள் நிறைந்த பேரறிஞர் குழாமின்
வரமாகும் வாழ்வு தேக்கமின்றி தேடற்கரிய பேற்றினை போற்றுவோம் தினமும்
கவியாழம் பேரழகு..
Reply
Vetha Langathilakam
·
Vasantha VJ mikka nanryada.....vaalka valamudan 13-10-2026
ஆதித் சக்திவேல் mikka nanry 16-10-2026
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு·
Sakthi Sakthithasan...Thank you...16-10-2026
Janaki Srinivasulu... Thank you sister...16 -10-2026
பதிலளிநீக்குசெ. இரா. செல்வகுமரன்
பதிலளிநீக்கு·
முதுமை என்னும் மெதுமை மதுமையாக இனிக்கட்டும்
(மது = தேன்)
Reply
Vetha Langathilakam
·
செ. இரா. செல்வகுமரன் ஆம் ஐயா! ஏற்றுக் கொள்ளும் வாழ்வை
இனிக்கச் செய்வது நம் கடனே.
தங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றியும் மகிழ்ச்சியும்.
வாழ்க வளமுடன்....16-10-2026