செவ்வாய், 5 மே, 2026

584 (1084) நட்புச் சிகரனே!


   



    நட்புச் சிகரனே!

00

நெஞ்சக் கலசத்தின் சுடரே!

நெஞ்சுரம் பெருக்கும் இளவரசனே!

நெடுங்கடலாய் இசை பெருக்குபவனே!

காதல் இராகமெனும் கானமிசைப்பவனே !

குளிர் தென்றலாய் இதமளிப்பவனே!

00

நாளும் பொழுதும் உள்வாங்கும்

ஆளும் உணர்வு அமுதமாக

மூளுதலாக என்னுள் ஓங்கும்

மேளதாளமாகுமோ காதலின்

உண்மை நினைவின் பரிசுத்தம்!

00

அன்புக் கடலின் நவரசநோக்கே!

இன்பமாய் வசீகரித்து ஆசையில்

சுண்டியிழுக்குமோ! இரவும்

பகலும் பிரவாகமாய் அமுதமாய்

இறங்கும் இன்பமே! பாசதீரனே!

00

காதல் கவிச்சுடர்-வேதா. இலங்காதிலகம்.தென்மார்க்-5-5-2026


       


 

10 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Mikka nanry M.Aiyappan Pillai - (yaathum uure javarum keleer)...5-5-2026

    பதிலளிநீக்கு
  2. Pss Manian
    👌 அருமையான வரிகள்! 🌹 🌹

    Vetha Langathilakam
    Pss Manian -(Nillamuttam)...மிக மகிழ்ச்சி ஆக்கமும் ஊக்கமும் தரும் கருத்து
    அன்புடன் நன்றி...5-5-2026

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    Vindyeswary Nadarajah
    Paramasivam Ponnampalam
    Natarajan Baskaran...மிக மகிழ்ச்சி .....5-5-2026 அன்புடன் நன்றி

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    Mikka nanry nisha Rajesh and vindy....5-5-2026 thamil vaanam...

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    Mikka nanry Sivarajan sarasananthan...5-5-2026

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    Thank you Muthu Raj.....(pune thamil sangam) 5-5-2026

    பதிலளிநீக்கு
  7. Pss Manian
    ஓ.. அருமை

    Vetha Langathilakam
    Pss Manian mikka nanr. makilchchy....(padaippu)...6-5-2026

    பதிலளிநீக்கு
  8. Pandu Uthira
    அருமை... நல்வாழ்த்துகள்👌👌👌
    Well Done Applause Sticker
    photo wish
    Vetha Langathilakam
    Pandu Uthira அருமை. வாழ்த்துகள்!!!! (chennai muthamil sangam...6-5-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...