ஞாயிறு, 17 மே, 2026

587 (1087) uudakam.... ATBC radio KUDUMpam

 

      https://www.facebook.com/sownthary.sivananthan/videos/1678801443274002

        


 குடும்பம்.

 (சௌந்தரி வானொலி அவுஸ்திரேலியா. முதலாவதாக வாசிக்கிறார் எனது கவிதை)

00
குடும்பம் ஒரு கதம்பம்.
ஒடுங்காத சமூக அமைப்பு.
நடுங்காத பாதுகாப்பு அரண்.
பிடுங்கல் பிக்கலற்ற இணைப்பு.
00
அன்பைக் கொடுத்து எடுக்கும்
இன்ப சொர்க்கம் பிரிவற்றதானால்.
மன்பதையின் மலர்விரியும் நந்தவனம்.
முன்னேறும் சமூகத்தின் கல்வியகம்.
00
தந்தை தாய் சகோதரமென
சிந்தை கவரும் உறவுகள்.
விந்தையான கவிதைச் சிகரங்கள்.
உந்து விசையான ஊன்றுகோல்கள்.
00
பெறற்கரிய மழலைச் செல்வங்களால்
திறனுடைய பெருவிருட்சமாகிறது.
சிறகுகள் ஒன்றையொன்று அணைக்கும்
நிறமுடைய அன்பிங்கு உரம்.
00
ஒற்றுமை தியாகம் விட்டுக்கொடுத்தல்
இற்றுவிடாத உயர் குணங்கள்.
பற்றுமிக்கத் திடமானது குடும்பம்.
பாசதீபம்- பல்கலைக்கழகம் -கடவுளின் பரிசு
00
கவியருவி - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க். 13-5-2026


    

         

3 கருத்துகள்:

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...