திங்கள், 18 மே, 2026

588 (1088) மாயக் காலம்.

 

       


 மாயக் காலம்.

00
(கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை.
தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.)
00
காலம் ஒரு நீண்ட கனவு
ஆலம் விழுதாக நீளும்
ஓலமிடும் அலையாகும்
பலகேலமும் ஆகும்.
கோலமாகி மகிழ்வு தரும்.
சாலகமாகி பின்னலிடும்.
தாலம் போல உயரும்.
நாலாவாகவும் ஆழமாகும்.
00
மாயச்சொல் காலம்.
மரத்தில் வரையாக கணக்கிடும்.
முதியோர் மௌனம் உடைக்கும்.
முகிழ்ந்து மனதில் குமிழியாகும்.
முக்காலம் என்ற பிரிவில்
மயிலிறகு தடவும் இன்பமாயும்
கவிதை வாசிப்பிலும் கரைகிறது காலம்.
காலத்தால் எதுவும் முடியும்.(நாள் செய்வது நல்லோர் செய்யார்)
00
பாடசாலை மணியும் கல்வியும்
காத்திருத்தலும் பெறுமதிக் காலமே.
தொடர்பு - தொந்தரவு- எதிர்பார்ப்பற்றது.
தூக்கம் கொடுப்பதும் கெடுப்பதும்
துயரை மறக்கடிப்பதும் காலமே.
காலம் ஊமை தான்.
பெற்றவர் நினைவை மறக்கடிக்காது.
காலமறிந்து பயிர் செய்யணும்.
00

முத்தமிழ் தாரகை – வேதா. இலங்காதிலகம் -தென்மார்க். 18-5-2026




3 கருத்துகள்:

  1. Pss Manian
    👏👏👏அருமையான வரிகள். 🌹 🌹
    3h
    Reply
    Share
    Vetha Langathilakam
    மகிழுவூக்கக்கருத்தால் ஊக்கம் மலரும்.
    May be an image of text that says 'மகிழ்ஆூக்கக் கருத்தால் ஊக்கம் பூக்கும்! நோக்கமிவ் வரிகள் வார்க்குது மகிழ்வு! கோர்ப்பது https://kovaik.othai.wordpes https: dpress நன நன்றிகள்! 6om Gettyimages //. WOT upress.com com httns:/ 80'

    Vetha Langathilakam
    Pss Manian மகிழுவூக்கக்கருத்தால் ஊக்கம் மலரும்.(nilla muttam..)...19-5-2026

    பதிலளிநீக்கு
  2. Rajendran
    🔴காலம் உங்களுக்கு கைகொடுக்கும்!
    கவிதை 💕உங்களுக்கு புகழ்🔴 கொடுக்கும் 💜❤️
    Well Done Applause Sticker

    Vetha Langathilakam
    Rajendran...மகிழவூக்கக்கருத்தால் ஊக்கம் மலரும்.(Erodu Thamilanpan)....19-5-2026
    👏👏👏 🌹 🌹
    May be an image of text that says 'மகிழ்ஆூக்கக் கருத்தால் ஊக்கம் பூக்கும்! நோக்கமிவ் வரிகள் வார்க்குது மகிழ்வு! கோர்ப்பது https://kovaik.othai.wordpes https: dpress நன நன்றிகள்! 6om Gettyimages //. WOT upress.com com httns:/ 80'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rajendran
      Vetha Langathilakam ஆக்கபூர்வமான உங்களின் இந்த💜❤️ கவிதை வரிகளே ஆயிரம்பேரை மகிழ்விக்கும்! நன்றி🙏💕 ங்க வணக்கம்🙋
      Emoticon Ok Sticker by AridenaOSD
      20-5-2026

      நீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...