ஒருவர் செயல் உலகை மாற்றாது!
00
அந்த அரங்கில் அறிவிப்பாளர் தான்
அறிமுகங்கள் விரிவாக சிறப்புற நடந்தது.
அருமையான எனது முறையில் விபரமின்றி
அலட்சியமாக என் பெயருடன் அறிவிப்பு
00
அங்கீகாரமாக என் நிகழ்வு அரங்கேறியது.
அறிமுகம் குறுகியதை சபையோர் நன்கு
அவதானித்திருப்பர். அகந்தை நன்கு சிலிர்த்தது.
அகளங்கமின்றி என் குரல் விகசித்தது. (மலர்ந்தது)
00
இணையத் தளத்திலும் பலர் இப்படி
இசைவுடன் இங்கிதமாக விபரமாக அறிமுகமானார்கள்.
இங்கும் நான் நிராகரிக்கப்பட்டேன் அதிசயமல்ல!
அகிலம் இன்றும் என்னை நிராகரிக்கவில்லை.
00
அறிவிப்பாளர் மட்டுமல்ல இன்னும் சிலரும்
அநியாயமாக அகவிருளால் பின் தொடரலாம்.
அலட்சியத் தேரில் ஏறி அசையலாம்.
அடுத்தவரை உயர்த்தி சிறுகோடு பெருங்கோடாக
00
நடக்கட்டும் நாடகம்! வானும் கடலும்
நாளும் என் ஆக்கங்களை அனுபவிக்கிறது.
நகைமுகமாக அலட்சியம் குரைக்கட்டுமே! திமிராக
நசுக்குவதாக எண்ணி நகர்வலம் வரட்டுமே!
00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் - 17-9-2026


M.A. Ramamoorthy
பதிலளிநீக்கு·
அருமை...வாழ்த்துகள்.
Reply
Share
Vetha Langathilakam
·
M.A. Ramamoorthy mikka nanry vaalka valamudan...(chennai Muthamil sangam) 21-9-2026
ஆதித் சக்திவேல்..mikka nanry anpudan urave...19-9-2026
பதிலளிநீக்குThank you very much..V.A.sambantham...21-9-2026
பதிலளிநீக்குVinith.S mikka nanry....(jaathum ure jaavatum keleer) 22-9-2026
பதிலளிநீக்குThank you thevaki -B- god bless you- 22.9.2026
பதிலளிநீக்கு